Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருட பகவானை பற்றிய சில அரிய தகவல்கள் !!

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (18:06 IST)
கருடன் பெருமாளின் கொடியாகவும் விளங்குகிற காரணத்தால் பெருமாள் கோயில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம்பம் என்றும் கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. இவருக்கு பெரிய திருவடி என்ற பெயரும் உண்டு.


திருமால் அருளிய வரத்தின்படி திருக்கோயில்களில் கருடக்கொடியாகவும், திருமாலுக்கு வாகனமாகவும் திகழும் கருடன், திருமாலை நமக்குக் காட்டியருளும் குருவாகவும் போற்றப்படுகிறார்.

கருடன் மற்ற பறவைகளைப் போல் இறக்கைகளை விரித்துக்கொண்டு பறப்பதில்லை. கருடனின் பார்வையும் மிகக் கூரானது. கருடக் குரலின் அடிப்படையில் "கருடத்வனி' என்று ஒரு ராகமே அமைந்துள்ளது.

ஒவ்வொரு திருமால் கோயிலிலும் கருட ஸேவைத் திருவிழா பலமுறை நடக்கும். மாசி மகத்தன்று கருட சேவையில் பகவான் திருக்கோயில்களின் அருகேயுள்ள புஷ்கரிணிக்கோ, ஆறு அல்லது சமுத்திரங்களுக்கோ சென்று தீர்த்த வாரி கண்டருள்வார்.

கருடனுக்கு வடை மாலை சாற்றுவது வழக்கம். பூரண கொழுக்கட்டையைப் போன்ற அமிர்த கலசம் இவருக்கு நிவேதனம். "கருடத்வனி' ராகமாய் நம் வாழ்க்கை இனிமை பெற, கருட பஞ்சமியன்றும் கருட ஜெயந்தியன்றும் கருடாழ்வாரையும், அவர் தாங்கிச் செல்லும் திருமாலையும் வழிபடுவோம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்! - இன்றைய ராசி பலன் (25.06.2024)!

திருமலையில் உள்ள ஆஞ்சநேயர் சிலையின் சிறப்புகள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து அதிகரிக்கும்! - இன்றைய ராசி பலன் (24.06.2024)!

இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் செலவு உண்டாகும்! - இன்றைய ராசி பலன் (23.06.2024)!

இந்த ராசிக்காரர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும்! - இன்றைய ராசி பலன் (22.06.2024)!

அடுத்த கட்டுரையில்
Show comments