மாதம் தோறும் அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை பஞ்சமி அன்னை ஸ்ரீ வாராஹி வழிபாட்டிற்கு சிறப்பான நாள். வருடம் ஒரு முறை ஆனி மாத அமாவாசையிலிருந்து வரும் ஒன்பது நாட்கள் ஸ்ரீ வாராஹிக்குரிய ஆஷாட நவராத்திரியாகும்.
இந்த நாட்களில் வரும் வளர்பிறை பஞ்சமி திதி அன்னையின் அருளை எளிதில் பெற மிகச்சிறந்த நாள். இன்று வாராஹி வழிபாடு சகல செளபாக்கியங்களையும் தரும்.
பூஜைக்குறிய நேரம் இரவு எட்டு மணிக்கு மேல். வீட்டில் வாராஹி விக்ரஹம் அல்லது படம் இல்லை என்றாலும் ஒரு நெய் தீபம் ஏற்றி அதையே அன்னை வாராஹியாக பாவித்து வழிபடலாம். கணபதி, குரு மற்றும் குல தெய்வ வழிபாட்டுடன் பூஜையை முறைப்படி துவங்க வேண்டும்.
வாராஹிக்குரிய துதி மற்றும் மூலமந்திரம் படிக்கவும். மூல மந்திரத்தை 108 முறை ஓதுவது சிறப்பு. அவளுக்குறிய பன்னிரு திருநாமங்களை மலர்களால் (செந்நிற மலர்கள் சிறத்தது) அர்ச்சித்து தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
வராகி காயத்ரி மந்திரம்:
ஓம் ச்யாமளாயை வித்மஹே!
ஹல ஹஸ்தாயை தீமஹி!!
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்!!!
ஸ்ரீ வராஹி அம்மன் துதி:
ஓம் குண்டலி புரவாசினி,
சண்டமுண்ட விநாசினி,
பண்டிதஸ்யமனோன்மணி, வாராஹீ நமோஸ்துதே!
அஷ்ட லெக்ஷ்மி ஸ்வரூபிணி,
அஷ்டதாரித்ரிய நாசினி, இஷ்ட காமப்ரதாயினி,
மஹா வாராஹீ நமோஸ்துதே!
மஹா வராஹி மூல மந்திரம் 1:
ஓம் ஐம் க்லௌம் வாராஹியை நமஹ்!!!
மஹா வராஹி மூல மந்திரம் 2:
ஓம் க்லீம் வராஹ முகி! ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி!
ஸ்ரீம் தன வசங்கரி! தனம் வர்ஷய ஸ்வாகா!