Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரட்டாசி மாதத்தில் கொண்டாடக்கூடிய சாரதா நவராத்திரி !!

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (15:10 IST)
சாரதா நவராத்திரி தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் கொண்டாடும் நவராத்திரி. வட மாநிலங்களில் துர்கா பூஜையாக இது கொண்டாடப்படுகிறது. இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிட ரீதியாக ஒரு காரணம் உண்டு.


நவக்கிரகங்களின் சஞ்சாரத்தை ‘கோள்சாரம்’ என்றும் குறிப்பிடுவர். இதில் சூரியனுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இவர் புரட்டாசி மாதத்தில் புதனுக்குரிய கன்னி ராசியில் சஞ்சரிப்பார். புதன் கல்வி, கலைகளுக்கு உரியவராகவும், புத்திகாரகராகவும் பண்பு நலன்களைத் தருபவராகவும் இருப்பவர். அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலை மகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம்.

இசை, நடனம், விளையாட்டு போன்ற கலை பயில்பவர்களும், ‘அட்சர அப்யாசம்’ என்னும் முதல் படிப்பு சடங்கு செய்பவர்களும் புரட்டாசியில் வரும் விஜய தசமி நாளிலேயே தொடங்குகிறார்கள். புரட்டாசியில் வரும் இந்த நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து ‘சாரதா நவராத்திரி’ என்று அழைத்தனர்.

சரஸ்வதிக்கு, சாரதா என்ற பெயரும் உண்டு. கல்வி மட்டுமல்லாமல் செல்வமும், தைரியமும் மனிதனுக்கு அவசியம். அவற்றை பெற்று வாழ்வு வளம் பெறுவதற்காகவே புதனுக்குரிய புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் கொண்டாடி வழிபடுகிறோம்.

தொடர்புடைய செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவிலின் தெப்பக்குளத்தின் சிறப்புகள்

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து நன்மை தரும்! - இன்றைய ராசி பலன் (04.05.2024)!

மீனாட்சி அம்மன் கோவிலில் வன்னிமரத்தடி விநாயகர் கோவில்

இந்த ராசிக்காரர்களுக்கு கணவன், மனைவி இடையே கருத்து வேற்றுமை நீங்கும்! - இன்றைய ராசி பலன் (03.05.2024)!

வன்னி மரத்தை வணங்குவதால் ஏற்படும் பலன்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments