Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. குவிந்த பக்தர்கள்..!

Mahendran
புதன், 14 மே 2025 (19:11 IST)
சபரிமலை ஐயப்பன் கோவில், ஒவ்வொரு தமிழ் மாத துவக்கத்திலும் 5 நாட்களுக்கு மாதாந்திர பூஜைக்காக திறக்கப்படும். இந்த நாட்களில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சபரிமலைக்கு வருகை தருகின்றனர்.
 
இந்த மாதம் வைகாசி மாத பூஜை நடைபெற உள்ளதால், இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. கோவில் தந்திரிகளின் முன்னிலையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து, தீபாராதனை செய்து வழிபாடு நடத்துகிறார். இதையடுத்து, பதினெட்டாம் படியின் கீழ் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டும் நிகழ்வு நடைபெறும்.
 
இன்று நடை திறப்புக்கு பிறகு, எந்தவொரு சிறப்பு பூஜைகளும் நடைபெறாது. "அரிவராசனம்" பாடப்பட்ட பிறகு கோவில் நடை மீண்டும் மூடப்படும்.
 
நாளை  அதாவது மே 15ஆம் தேதி காலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். பிறகு வழக்கமான தினசரி பூஜைகள் நடைபெறும். அன்று இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாட்டுடன் கோவில் நடை மூடப்படும்.
 
மாதாந்திர பூஜை மே 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அந்த வரையிலான நாட்களில், பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். 19ஆம் தேதி இரவில் பூஜை முடிந்து, கோவில் நடை மூடப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் நிம்மதி குறையும் சூழல் ஏற்படலாம்!- இன்றைய ராசி பலன்கள் (11.05.2025)!

கும்பகோணத்தில் சாரங்கபாணி பெருமாள் தேரோட்டம்.. பக்தர்கள் கூட்டம், விழாக்கோலம்!

இந்த ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை!- இன்றைய ராசி பலன்கள் (10.05.2025)!

சிதம்பரம் சித்திரகுப்தருக்கு சிறப்பு பூஜைகள்.. கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் அலைச்சல் ஏற்படலாம்!- இன்றைய ராசி பலன்கள் (09.05.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments