Publish Date: Wed, 14 Dec 2022 (22:20 IST)
Updated Date: Wed, 14 Dec 2022 (22:28 IST)
திருப்பதி திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய ரூபாய் 300 ரூபாய் டிக்கெட் எப்போது வாங்கலாம் என்பது குறித்த அறிவிப்பை தேவஸ்தானம் அறிவித்துள்ளது
இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருப்பதி ஏழுமலையானை சுலபமாக தரிசனம் செய்ய தேவஸ்தானம் டிசம்பர் 16 மற்றும் 31 ஆகிய தேதிகளில் காலை 9 மணிக்கு ரூபாய் 300 தரிசன டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிடுகிறது
பக்தர்கள் இதனை கருத்தில் கொண்டு ரூபாய் 300 தரிசன டிக்கெட்டுகளை டிசம்பர் 16 மற்றும் 31-ஆம் தேதிகளில் முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது
இந்த டிக்கெட்டை முன்பதிவு செய்து கொண்டால் சிரமமின்றி திருமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்யலாம் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.