Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண திருவிழா.. குவிந்த பக்தர்கள்

இன்று ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண திருவிழா.. குவிந்த பக்தர்கள்

Mahendran

, புதன், 14 ஆகஸ்ட் 2024 (18:52 IST)
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண திருவிழாவின் நிறைவு நாளான இன்று சுவாமி-அம்பாள் கெந்தமாதன பர்வதம்  திருக்கல்யாண திருவிழா வைபவம் நிகழ்ந்தது.

கடந்த சில நாட்களாக ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் நடைபெற்று வரும் நிலையில்  கடந்த ஜூலை 29ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து ஆகஸ்ட்  தங்கப் பல்லக்கு, தேரோட்டம், ஆடிப்பூரம், ஆடித்தபசு, திருக்கல்யாணம்,  திரு ஊஞ்சல், மஞ்சல் நீராடல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிலையில் இன்று ஆடி திருக்கல்யாண திருவிழாவின் நிறைவு நாளில் அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை,  சாயரட்சை பூஜை, கால பூஜைகள் நடைபெற்றது

இதனையடுத்து காலை 6 மணியளவில் ராமநாதசுவாமி, பிரியாவிடை, பர்வதவர்த்தினி அம்பாள், பஞ்ச மூர்த்திகளுடன் தங்க கேடயங்களில் ராமநாதசுவாமி கோயிலிருந்து புறப்பட்டு, கெந்தமாதன பர்வதம் மண்டகப் படியில் எழுந்தருளல் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தது.

இன்று இரவு 10 மணியளவில்  அர்த்தஜாம பூஜை,  பள்ளியறை பூஜையும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்களுக்கு முதலீடுகளில் கவனம் தேவை! – இன்றைய ராசி பலன்கள்(14.08.2024)!