Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கணவன், மனைவி இடையே பிரச்சனையா? உடனே இந்த கோவிலுக்கு போங்க..!

Advertiesment
கணவன்

Mahendran

, வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (18:34 IST)
கணவன் மனைவி இடையே உள்ள பிரச்சனை தீர கும்பகோணம் அருகே கோடாலி கருப்பூர் என்ற கிராமத்தில் உள்ள ராம நாராயண பெருமாள் ஆலயத்திற்கு சென்றால் கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இந்த கோவிலில் ராமபிரான் தனது தேவியோடு இருக்கும் காட்சி அமைந்துள்ளது என்றும் விசாலமான பிரகார பீடம், கொடிமரம், கருடாழ்வார் சன்னதி மற்றும் சிறப்பு மண்டபமும் உள்ளது என்றும் கூறப்படுகிறது .

ண்டபத்தில் தொடர்ந்து உள்ள கருவறையில் சீதாதேவி மற்றும் லட்சுமணனுடன் ராமபிரான் அருள் பாலிக்கிறார் என்றும் ராமபிரான் கரங்களில் உயரமான வில் அம்புகள் உள்ளன என்றும் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் தனி சன்னதி சன்னதியில் எழுந்தருள்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்த கோவிலுக்கு வந்து வேண்டிக் கொண்டால் கணவன் மனைவி இடையே உள்ள பிரச்சனை தீரும் என்றும் மகிழ்ச்சியாக தம்பதிகளாக வாழ தொடங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது. அதே போல் சொத்து பிரச்சனை இருப்பவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வணங்கினால் சகோதரர்கள் பிணக்கும் பிரிந்து விடும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்களுக்கு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்!– இன்றைய ராசி பலன்கள்(22.08.2024)!