Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பத்ரகாளிக்கு தனி சன்னதி உள்ள பத்ரகாளி அம்மன் வீரபத்திரர் ஆலயம்..!

Advertiesment
பத்ரகாளிக்கு தனி சன்னதி உள்ள பத்ரகாளி அம்மன் வீரபத்திரர் ஆலயம்..!
, செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (19:01 IST)
சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள அருள்மிகு பத்திரகாளியம்மன் வீரபத்திரர் ஆலயத்தில் பத்ரகாளிக்கு என தனி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டால் 90 நாட்களில் நினைத்ததை நிறைவேறும் என்று நம்பிக்கையாக உள்ளது.  
 
இந்த கோவிலில் பத்திரகாளிக்கு தனி சந்நிதி உள்ளது மட்டுமின்றி வைஷ்ணவி பிரம்மி மகேஸ்வரி ஆகியோரது சிலைகளும் தட்சிணாமூர்த்தி பைரவர் ஆகியோர்களின் சிலைகளும் உள்ளது. 
 
இந்த திருக்கோவிலில் வீரபத்திரர் ஒன்பதடி உயரத்திற்கு கம்பீரமாக இருப்பார் என்பதும் பூமியிலிருந்து கிடைத்த இந்த சிலையை மக்கள் வழிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
இந்த கோவில் சர்ப்ப தோஷ நிவர்த்தி தளமாகவும் விளங்குவதாகவும், காளகஸ்தி செல்ல முடியாதவர்கள் இந்த கோயிலுக்கு சென்ற பூஜை செய்தால் காளகஸ்தி சென்ற பலன் கிடைக்கும் என்று கூறப்படுவது உண்டு.
 
ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி தினத்தில் இந்த கோயிலில் 10 நாட்கள் விழா நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிகாரர்கள் வீண் விவாதங்களை தவிக்க வேண்டிய நாள்: இன்றைய ராசிபலன் (05-09-2023)!