Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழனியில் காப்பு கட்டுதலுடன் திருக்கார்த்திகை விழா தொடக்கம்.. குவிந்த பக்தர்கள்..!

Mahendran
சனி, 7 டிசம்பர் 2024 (17:30 IST)
பழனி தண்டாயுத சாமி கோயிலில் இன்று கார்த்திகை தீப திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

இன்று மாலை ஐந்து முப்பது மணிக்கு மூலவருக்கும் சண்முகருக்கும் காப்பு கட்டப்படும் என்றும், தொடர்ந்து துவார பாலகர்கள், நவ வீரர்கள், மயில் மற்றும் தீபக்கம்பம் ஆகியவற்றுக்கும் காப்பு கட்டப்படும் என்றும், அதன் பிறகு சிறப்பு ஆராதனை மற்றும் அர்ச்சனை நடைபெறும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இன்று இரவு 7 மணிக்கு தங்க ரதம் புறப்படும் என்றும், அதை தொடர்ந்து ஆறு நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்றும், டிசம்பர் 12ஆம் தேதி பரணி தீபம் ஏற்றுதல் நிகழ்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருக்கார்த்திகை தீபம் நிகழ்ச்சி டிசம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என்றும், அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு, டிசம்பர் 13ஆம் தேதி பாதுகாப்பு கருதி பழனி அடிவாரத்தில் இருந்து மலை கோவிலுக்கு செல்ல ஒரு வழி பாதை அமல்படுத்தப்படும் என்றும், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் யானை பாதை வழியாகவும், கோவிலில் இருந்து கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆதாயம் தரும் ஆகஸ்டு மாத ராசிபலன், அதிர்ஷ்ட நாட்கள்! – சிம்மம்

ஆதாயம் தரும் ஆகஸ்டு மாத ராசிபலன், அதிர்ஷ்ட நாட்கள்! - கடகம்

இந்த ராசிக்காரர்களுக்கு வீண் செலவு ஏற்படலாம்! கவனம் தேவை! இன்றைய ராசி பலன்கள் (30.07.2025)!

புத்திர பாக்கியம் அருளும், தோஷங்கள் நீக்கும் சிறப்பு நாள் எது தெரியுமா?

ஆதாயம் தரும் ஆகஸ்டு மாத ராசிபலன், அதிர்ஷ்ட நாட்கள்! – மிதுனம்

அடுத்த கட்டுரையில்
Show comments