பிறந்த நாளில் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் ஏராளமான நன்மைகள்..!

Webdunia
வியாழன், 2 மார்ச் 2023 (19:10 IST)
பிறந்த நாளில் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் ஏராளமான நன்மைகள்..!
பிறந்தநாளின் போது ஒன்பத்துவேலி வன்மீகநாதா் சுவாமி கோவிலில் சென்று வழிபட்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி என்ற பகுதி அருகே இருக்கும் ஒன்பத்துவேலி வன்மீகநாதா் கோயிலில் மிகவும் பழமை வாய்ந்தது என்றும் சக்தி வாய்ந்தது என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்கள் பிறந்தநாள் நட்சத்திரத்தின் போது இந்த கோயிலுக்கு சென்று வணங்கினால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்றும் அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று வளமான வாழ்வை வாழ்வார்கள் என்றும் நம்பிக்கையாக உள்ளது. ஒன்பத்துவேலி வன்மீகநாதா்வளமான வாழ்வை அருளும் தெய்வம் என்றும் உடலில் ஏற்படும் அனைத்து விதமான நோய்களையும் தீர்க்கும் சக்தி உடையவர் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த கடவுளை வழிபட்டால் வளமான வாழ்வு கிடைக்கும் என்றும் தினமும் காலை 9 மணி முதல் 12 வரை நடை திறந்து இருக்கும் என்றும் இந்த நேரத்தில் சென்று வணங்கலாம் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
தென் மாவட்டங்களில் இருந்து இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை சூரிய பொங்கல் வைக்க எது நல்ல நேரம்?.. வாங்க பார்ப்போம்!...

தினமும் 3 லட்சம் பேருக்கு உணவு!.. பசியாற்றும் திருப்பதி தேவஸ்தான அன்னதான திட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் மூடப்பட்டது.. இன்று முதல் வழக்கமான சேவைகள் தொடரும்..

அத்தி மரத்தில் வடிக்கப்பட்ட கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் சிலை.. எந்த கோவிலில்?

'யோக தட்சிணாமூர்த்தி' எழுந்தருளியிருப்பது தனிச்சிறப்பு மிக்க கோவில்.. எங்கு உள்ளது?

அடுத்த கட்டுரையில்
Show comments