Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவகிர தோஷத்தின் பிடியிலிருந்து விடுபட போட வேண்டிய கோலங்கள்

நவகிர தோஷத்தின் பிடியிலிருந்து விடுபட போட வேண்டிய கோலங்கள்

Advertiesment
நவகிர தோஷத்தின் பிடியிலிருந்து விடுபட போட வேண்டிய கோலங்கள்
நவகிர தோஷத்தின் பிடியிலிருந்து விரைவில் விடுபட ஒவ்வொரு நாளும் வீட்டு பூஜையறையில் போட வேண்டிய நவகிரக கோலங்கள் வீட்டு பூஜையறையில் நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொறு வகையான கோலங்களை போடுவது வழக்கம்.


 
 
கோலங்களில் பலவகை உண்டு. ஹ்ருதய கமலம், நவகிரக கோலங்கள், ஐஸ்வர்ய கோலம், ஸ்ரீ சக்கர கோலம் என்று பல வகையான கோலங்கள் உண்டு. இதில் அதில் குறிப்பாக நவக்கிரகத்திற்கென்று தனிப்பட்ட கோலங்களும் உண்டு. 
 
ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கோலம் வீதம் வாரத்தின் ஏழு நாட்களுக்கும் ஒவ்வொரு கோலம் போடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்தந்த நாளுக்குரிய கோலங்களை பூஜையறையில் போட்டு இறைவனை வழிபட்டால் நவக்கிரகங்களினால் ஏற்படும் தோஷங்கள், நவகிரகங்களின் கெடுதல் பலன்களிலிருந்தும் விடுபடலாம்.
 
ஹ்ருதய கமலம், நவகிரக கோலங்கள், ஐஸ்வர்ய கோலம், ஸ்ரீ சக்கர கோலம் போன்றவற்றை மஞ்சள் பொடியினாலும், அரிசி மாவினாலும் மட்டுமே போடுவது குடும்பத்திற்கு நற்பலனை தரும். 

webdunia

 
 
காவி பட்டை போட்டு கோலம் போடுவது சிவசக்தியை குறிக்கும்.மங்களமான நாட்களில் இதை போட வேண்டும்.சகல நன்மை தரும். ஒரு இழை கோலம் போட கூடாது. 
 
இரட்டை இழை கோலம் போடுவது மங்களம் சிறக்கும். கோலங்களில் தெய்வீக யந்திரங்களுக்கு சமமான கோலங்களை பூஜை அறையில் மட்டுமே போடவேண்டும். படி கோலத்தின் நான்கு மூலைகளிலும் போடும் தாமரை திசை தெய்வங்களின் ஆசியை பெற்று தரும். வாசல் படிகளில் குறுக்கு கோடுகள் போடக் கூடாது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆகஸ்ட் 2 ம் தேதி குரு பெயர்ச்சி விழா