Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவலிங்க பூஜைக்கு உகந்த பூ இதுதான்

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (23:21 IST)
சிவலிங்க பூஜைக்கு உதவும் பொருட்களில் நாகலிங்கப் பூவுக்கும் முக்கியப் பங்கு உண்டு. புராணத்தில் நாகலிங்கப் பூவுக்கு 21 ரிஷிகளின் தவ ஆற்றல்களை அளித்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.
 
நாகலிங்கப் பூவைத் தொடவேண்டும் என்றால், சிவ பஞ்சாட்சரத்தை 1001 முறை சொல்லிப் பின்னரே தொடவேண்டும். நாகலிங்கப் பூவை கையில் எடுத்துப் பின்னர், 21 பேருக்கு அன்னதானம் செய்யவேண்டும். அப்படி 21 பேருக்கு அன்னதானம் செய்ததை 21 மாத்ருகா ரிஷிகள்  பெற்றுக்கொள்வதாக நம்பிக்கை.
 
நாகலிங்கப் பூவை ஈசனுக்கு சாற்றி வழிபட்ட பிறகு, அது வாடியப் பின்னரும் கூட, நாம் குளித்து விட்டுத்தான் அதனை எடுக்க வேண்டும்.  வாடிய நாகலிங்கப் பூவை எடுத்து ஓடும் ஆற்றில் போட்டு விட வேண்டும். அல்லது கடலில் போட வேண்டும்.
 
நாகலிங்கப் பூவையே சிவலிங்கமாக எண்ணி வீட்டில் தினமும் பூஜை செய்யலாம். இப்படி ஒரு வழிபாட்டு முறை கலியுகத்தின் ஆரம்ப காலத்தில் பின்பற்றப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
 
சிவலிங்கத்திற்கு சாற்றிய நாகலிங்கப் பூவை, பிரசாதமாக பெற்றுக்கொண்டு வீட்டிற்கு கொண்டு வரவேண்டும். நமது வீட்டுப் பூஜை அறையில்  சுவாமி படத்தின் முன்பாக அதனை வைத்துக்கொள்ள வேண்டும். நீண்டகாலமாக இருக்கும் நோய் தீரவோ அல்லது நீண்டகாலமாக இருக்கும் குறைபாடுகள் நீங்கிடவோ மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
 
நமது நோய் தீரும் வரை தினமும் வேண்டிக்கொண்டு சிவமந்திரங்கள் அல்லது தேவாரப் பாடல்கள் பாடி வழிபட வேண்டும். நமது  வேண்டுதல்கள் நிறை வேறிய பிறகு, நாகலிங்கப் பூவை ஓடும் நதி அல்லது கடலில் போடலாம். அதுவரை அது எவ்வளவு காய்ந்து  போனாலும், அதற்கு நமது வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி உண்டு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கன்னி! | December 2024 Monthly Horoscope| Kanni | Virgo

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – சிம்மம்! | December 2024 Monthly Horoscope| Simham

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கடகம்! | December 2024 Monthly Horoscope| Kadagam

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – மிதுனம்! | December 2024 Monthly Horoscope| Mithunam

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – ரிஷபம்! | December 2024 Monthly Horoscope| Rishabam

அடுத்த கட்டுரையில்
Show comments