ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை விரதம் இருந்தால் ஏராளமான பலன் கிடைக்கும் என நமது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
சோமவாரம் என்பது திங்கள் கிழமையை குறிப்பது என்பதால் திங்கட்கிழமை சிவபார்வதியை நினைத்து சிவன் விரதம் இருக்க வேண்ட்ம். அன்றைய தினம் சிவனை நினைத்து விரதம் இருந்தால் பல நன்மைகள் கிடைக்கும்
சோமவார விரதத்தை மேற்கொண்டால் பெரும் பலன்கள் கிடைக்கும் என்றும் அன்றைய தினம் அதிகாலையில் குளித்து விரதம் இருந்து சிவபார்வதி பூஜைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் இதனால் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு சண்டை சச்சரவு இல்லாமல் வாழலாம் என்றும் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்
மேலும் கணவன் மனைவி பிரிந்து இருந்தால் அவர்கள் மீண்டும் ஒன்று சேர 21 திங்கட் கிழமைகள் விரதம் இருக்க வேண்டும், அவ்வாறு இருந்தால் கணவன் மனைவி மீண்டும் ஒன்று சேர்வார்கள் என்றும் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள் நீர் ஆகாரம் மட்டும் உணவாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் பால் பழங்கள் ஆகியவற்றின் விரத நேரத்தில் உட்கொள்ளலாம் என்றும் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்