Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செப்டம்பர் 7ஆம் தேதி சந்திர கிரகணம்.. செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை என்னென்ன?

Advertiesment
சந்திர கிரகணம்

Mahendran

, செவ்வாய், 2 செப்டம்பர் 2025 (18:41 IST)
சந்திர கிரகண நிகழ்வு, இந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9.56 மணி முதல், செப்டம்பர் 8ஆம் தேதி நள்ளிரவு   நிகழ உள்ளது. இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும்.
 
ஜோதிட ரீதியாக, இந்த கிரகணம் சில ராசியினருக்கு தோஷங்களை ஏற்படுத்தலாம். குறிப்பாக, சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, புனர்பூசம், விசாகம் ஆகிய நட்சத்திரங்களை சேர்ந்தவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
 
கிரகண தோஷம் உள்ளவர்கள், கிரகண நேரத்தில் சிவ வழிபாடு செய்வது நன்மையளிக்கும். அதிகாலையில் குளித்துவிட்டு சிவன் கோவிலுக்கு சென்று வருவது நல்லது.
 
கிரகண நேரத்தில், மந்திரங்களை உச்சரிப்பது, தியானம் செய்வது, மற்றும் ஆன்மிக நூல்களைப் படிப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.
 
கிரகணம் முடிந்த பிறகு, குளித்துவிட்டு சுத்தமான ஆடைகளை அணிவது பாரம்பரிய வழக்கம்.
 
கிரகண நேரத்திற்கு பிறகு, ஏழைகளுக்கும், தேவைப்படுபவர்களுக்கும் தானம் செய்வது நன்மை தரும்.
 
கிரகண நேரத்தில் உணவு உட்கொள்வதையும், சமைப்பதையும் தவிர்க்க வேண்டும்.
 
கர்ப்பிணிப் பெண்கள் கிரகண நேரத்தில் வெளியே செல்வதையோ அல்லது கிரகணத்தை நேரில் பார்ப்பதையோ தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
 
கிரகணம் நிகழும் நேரத்தில் எந்தவொரு சுப காரியங்களையும் தொடங்குவதை தவிர்க்க வேண்டும்.
 
இந்த கிரகணக் காலத்தில் மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் அதன் எதிர்மறையான விளைவுகளைக் குறைக்கலாம் என்பது நம்பிக்கை.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை உயரும்! இன்றைய ராசி பலன்கள் (02.09.2025)!