Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிவபெருமான் கொடுத்த வரத்தால்தான் வாஸ்து உருவானது!

Advertiesment
சிவபெருமான் கொடுத்த வரத்தால்தான் வாஸ்து உருவானது!
வாஸ்து என்பதற்கு வசிப்பிடம் என்பது பெயர். வாஸ்தி என்ற லத்தீன் சொல்லில் இருந்து பிறந்ததே வாஸ்து என்னும் பெயர்.  வளமான மங்களகரமான இடத்துக்குப் பெயர்தான் வாஸ்து. இந்த வாஸ்து ஒரு வீட்டில் நிலைகொள்ள, அவரது வரலாற்றை அறிந்து, படித்து, முறைப்படி வழிபட்டபின் புது வீடு கட்டத் தொடங்க வேண்டும். அப்போதுதான் வாழும் காலத்தில் நிம்மதியாக  இருக்க முடியும்.

 
ஒருமுறை, அந்தகன் என்ற அசுரனுக்கும் சிவபெருமானுக்கும் இடையில் போர் ஏற்பட்டது. அப்போது சிவபெருமானுடைய  வியர்வையில் இருந்து மிகப்பெரிய சக்தி ஒன்று வெளிபட்டது. அது ஒரு அசுரனாக மாறி, சிவபெருமான் உத்தரவுப்படி  அந்தகனை விழுங்கி விட்டது.
 
பிறகு சிவனிடம் பல அற்புதமான வரங்களைப் பெற்று உலகையே ஆட்டிப் படைத்தது. அதனைக் கண்டு வருந்திய  சிவபெருமான், வீரபத்திரனை ஏவி அசுரனை அடக்கி விட கிழக்காகத் தலையை வைத்து விழும்படி கீழே சாய்க்கச் எய்தார்.
 
குப்புற விழுந்த அசுரன் மீண்டும் எழுந்து விடாமல் இருக்க, தேவர்களை அவன் மேல் வசிக்கச் செய்தார். பூமி வடிவான  பூசணிக்காயை உணவாகக் கொடுத்தார். தேவர்களது பாதம் பட்டதால், அசுரன் புனிதத் தன்மை அடைந்தான். மேலும்  மனிதர்களால் பூஜை செய்யப்படும் தகுதியைப் பெற்றான். அது மட்டுமின்றி பூமி தொடர்பான எந்த நிகழ்ச்சி ஆனாலும் வாஸ்து  புருஷனாகிய உன்னை பூஜை செய்த பிறகுதான் மற்ற வேலைகளைத் தொடங்குவார்கள் என்று இவருக்கு ஈசனால் வரம்  கொடுக்கப்பட்டு விட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிறிஸ்துமஸ் விழாவில் இடம்பெறும் கிறிஸ்துமஸ் தாத்தா....