Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குபேரன் அருள் பெற்று செல்வ வளம் பெருக செய்ய வேண்டியவை....

Advertiesment
குபேரன்
இறைவனை வழிபடும் ஒருமுறையை உபசாரம் என்பார்கள். வீட்டில் இறைவனை வழிபடும் முறைகளில் பஞ்சோபசாரம் எளிமையானது. இந்த ஐந்து முறைகளில் இறைவனை வழிபடுவதை பஞ்சோபசாரம் என்று சொல்வர்.
 

 
1. இறைவனின் திருவுருவ படங்களுக்குச் மஞ்சள், சந்தனம், குங்குமம் இடுவது
2. இறைவனின் திருப்பெயரைச் சொல்லி, மலர் சூட்டி, மலர் தூவி அர்ச்சனை செய்வது.
3. வீட்டை சுத்தப்படுத்தி சாம்பிராணி, பத்தி தூபம் இடுவது.
4. நெய்தீபம், சூடம் தீபாராதனை செய்வது.
5. நைவேத்யமாக பிரசாதம் படைப்பது.
 
இந்த எளிய முறைகளில் ஏதேனும் ஒன்றையாவது தினமும் கடைபிடித்து, பயபக்தியோடு இறைவனை வணங்கி, நியாயமான வழியில் வாழ்பவர்கள் நிறைந்த செல்வமும், தீர்க்காயுளும், வாழ்வுக்குப் பின் பிறப்பற்ற நிலையும் அடைவர்.
 
மேலும் செல்வம் பெருக சில குறிப்புகள்: வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி  கடாட்சம் ஏற்படும்.
 
வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய் வைத்திருக்க  குபேர சம்பத்து வரும்.
 
நமது வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு நீர் அருந்த தரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால்  ஜென்மஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.
 
அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.பூஜை காலைப் பொழுதில்  செய்யக்கூடாது. பிதுர்களைமட்டும் வழிபட பணம் வரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டு பூஜை அறையில் நாம் கவனிக்க வேண்டிய சில விதிமுறைகள்!