Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாஸ்து தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்!!

Advertiesment
வாஸ்து தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்!!
சில பரிகாரங்கள் மூலம் வாஸ்துவினால் ஏற்படும் தோஷம் விலகி நலன் பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

 
வீட்டின் அமைப்பு சரியில்லை, வாசற்கதவு வைத்தது சரியில்லை என பல பிரச்சனை ஏற்படுகிறது. இதையெல்லாம் எப்படி சரிசெய்வது என்று ஒரே குழப்பம். எல்லாவற்றிற்கும் பரிகாரம் உள்ளது.

பரிகாரங்களை சரிவர செய்து வந்தால் வாஸ்துவினால் ஏற்படும் தோஷம் விலகி நலன் பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. எனவே அவ்வாறு வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் செய்ய வேண்டிய சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.
 
காளஹஸ்தி சென்று சிவனை தரிசனம் செய்து விட்டு அதன் பின்னர் ராகுவுக்கு நாக சாந்தி செய்வதும் பலன் தரும். 
 
வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றுவது நலம் தரும்.
 
பவுர்ணமி தினத்தில் அழகர் கோவிலில் உள்ள தீர்த்த தொட்டியில் குளித்து ராக்காயி அம்மனுக்கு எலுமிச்சை பழம் மாலை அணிவிப்பது சிறப்பு தரும்.
 
தினமும் 27 முறை வாஸ்து காயத்திரி மந்திரம் ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும். ருநாகேஸ்வரம் சென்று ராகுகாலத்தில், ராகுவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது நன்மை தரும். ராகுவுக்கு மந்தாரை மலர் வைத்து வழிபாடு செய்யலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முருகனிடம் உள்ள மயில் உணர்த்தும் தத்துவம்!!