Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காளியம்மன் கோவிலில் குத்து விளக்கு பூஜை.! 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு.!

Senthil Velan
சனி, 10 பிப்ரவரி 2024 (10:04 IST)
தாராபுரத்தில் உள்ள தென்தாரை அருள்மிகு ஸ்ரீ, சின்னக்காளி காளியம்மன் கோவிலில் நடைபெற்ற குத்துவிளக்கு பூஜையில் பெண்கள் ஏராளமான கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் செய்தனர்.
 
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தென்தாரை அருள்மிகு ஸ்ரீ சின்னக்காளி காளியம்மன் கோவில்  உள்ளது. இந்த கோவிலில் ஒன்பதாம் ஆண்ட்டி முன்னிட்டு 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது 

உலகில் அன்பு, அமைதி ஏற்பட வேண்டியும், தமிழகத்தில் நல்ல மழை பெய்து கோடைவெயிலின் தாக்கம் குறைந்திடவும், ப்ளூ வைரஸ் நோய் தொற்றிலிருந்து பொதுமக்கள் மீண்டு வரவும்,  அனைத்து உயிர்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் குடிதண்ணீர் கிடைக்க வேண்டியும், விவசாயம் செழித்து அனைவரும் நலமுடன் வாழ வேண்டியும் பஜனை பாடல்களுடன் தீப அலங்காரம் நடைபெற்று.
 
இந்த நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட பெண்கள்  கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் செய்தனர். இறுதியாக பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆடி மாதம் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது எதற்காக?

இந்த ராசிக்காரர்களுக்கு வீண் அலைச்சல் தடை தாமதம் ஏற்படலாம்! – இன்றைய ராசி பலன்கள்(02.07.2024)!

அம்மன் கோவில்களில் ஆடி மாதம் விசேஷங்கள் ஏன்?

ஜூலை மாத ராசிபலன்கள் 2024! – மீனம்!

ஜூலை மாத ராசிபலன்கள் 2024! – கும்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments