நவகிரகங்களை எத்தனை முறை சுற்றி வழிபடுவது நல்லது ?

Webdunia
ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (00:51 IST)
நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும். அதாவது  முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தக் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாகச் சுற்றி வந்து வழிபடுதல்  வேண்டும்.
 
நவகிரகங்களை வழிபடுவது நல்லது என்றாலும், எந்த ஒரு கோயிலிற்குச் சென்றாலும் மூலவரை வழிபடாமல் வெறும் நவகிரக  வழிபாட்டை மற்றும் மேற்கொள்வது தவறானது. நவக்கிரகங்களின் நாயகனாக விளங்குபவர் சூரியன். நமது ஐந்து மதத்தின் ஆறு  பிரிவுகளில் ஒன்றான செளரம் என்பது சூரியனையே முழுமுதல் கடவுளாக கொண்டாடுகிறது. இருகரங்களில் தாமரை ஏந்தி,  வலம் புறம் உஷா, இடது புறம் பிரத்யுஷா என இரு மனைவியருடன் ஏழு குதிரை பூட்டிய ரதத்தில் கம்பீரமாய் வலம்  வருபவர்.
 
அது எத்தனை சுற்று தெரியுமா?
 
சூரியன் - 10 சுற்றுகள்
சுக்கிரன் - 6 சுற்றுகள்
சந்திரன் - 11 சுற்றுகள்
சனி - 8 சுற்றுகள்
செவ்வாய் - 9 சுற்றுகள்
ராகு - 4 சுற்றுகள் அடிப்பிரதட்சிணம்
புதன் - 5, 12, 23 சுற்றுகள்
கேது - 9 சுற்றுகள்
வியாழன் - 3, 12, 21 சுற்றுகள்
 
யோகம் தரும் நவக்கிரகங்கள்
 
1. சூரியன் - ஆரோக்கியம்
2. சந்திரன் - புகழ்
3. செவ்வாய் - செல்வச் செழிப்பு
4. புதன் - அறிவு வளர்ச்சி
5. வியாழன் - மதிப்பு
6. சுக்கிரன் - வசீகரத் தன்மை
7. சனீஸ்வரன் - மகிழ்வான வாழ்க்கை
8. ராகு - தைரியம்
9. கேது - பாரம்பரியப் பெருமை
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மயிலாப்பூரில் ஸ்ரீ சத்ய சாயி பகவானின் 'ப்ரேம ரத பவனி' உலா! சென்னை, மயிலாப்பூர்:

விபூதியால் தோன்றிய கோரக்கச் சித்தர்: காயகல்பச் செடி உருவான கதை

திருக்கார்த்திகை: பரணி தீபம் ஏற்றி முருகனை வழிபடும் மகத்துவம்!

சிதம்பரம் ஸ்ரீசிவகாமிசுந்தரி அம்மன் கோயில் ஐப்பசி பூரத் தேரோட்டம் கோலாகலம்

பழனி திருக்கார்த்திகை தீபத்திருவிழா: நவ. 27-ல் தொடக்கம்! டிச. 3-ல் முக்கிய நிகழ்வு

அடுத்த கட்டுரையில்
Show comments