குருவின் அருள் பெற ஒவ்வொரு வியாழக்கிழமையும் விரதம் இருந்து பரிகாரம் செய்ய வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
குருவுக்கு உகந்த நாளாகிய வியாழக்கிழமையில் நீராடி, மஞ்சள் நிற ஆடை அணிந்து விரதம் இருந்து பரிகாரம் செய்தால் குருவின் அருள் கிடைக்கும் என்றும் குருவின் அறருள் கிடைத்தால் திருமணத்தடை நீங்கும் செல்வம் பெருகும் என்றும் கூறப்படுகிறது.
குருவுக்கு மஞ்சள் நிற ஆடை ஏற்றது என்பதால் மஞ்சள் நிற ஆடை அணிந்து முல்லை மலர்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும் என்றும் கடலை பொடி சாதம், வேர்க்கடலை சுண்டல் ,பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் ஏழை எளியவர்களுக்கு மஞ்சள் நிற ஆடையை தானம் செய்தாலும் குருவின் அருளை பெறலாம் என்றும் குறிப்பாக குழந்தைகளுக்கு தானம் செய்வது சிறப்பாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.