Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செல்வம் செழிக்க... தீபாவளி லட்சுமி குபேர பூஜை செய்வது எப்படி?

Advertiesment
லட்சுமி குபேர பூஜை

Mahendran

, புதன், 15 அக்டோபர் 2025 (18:15 IST)
தீபாவளி பண்டிகையின்போது சகல ஐஸ்வரியங்களையும் அருளும் குபேர லட்சுமி வழிபாடு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. பெண்கள் மட்டுமல்லாது, ஆண்களும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.
 
தீபாவளிக்கு முதல் நாளே ஏற்பாடுகளை செய்துவிட்டு, தீபாவளி அதிகாலையில் 'கங்கா நீராடல்' செய்த பின் பூஜையை தொடங்க வேண்டும்.
 
பூஜை அறையில் குபேர லட்சுமி படம் வைத்து, தலை வாழை இலையில் நவதானியங்களை பரப்ப வேண்டும். நடுவில் நீர் நிரப்பிய சொம்பை வைத்து, மாவிலை கொத்து செருகிய மஞ்சள் பூசிய தேங்காயை வைத்து கலசம் நிறுவ வேண்டும். வெற்றிலை, பாக்கு, பழங்கள், பணம் மற்றும் சில்லறை நாணயங்களை வைத்துக்கொள்ள வேண்டும்.
 
மகாலட்சுமி ஸ்தோத்திர பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். தொடர்ந்து, குபேர ஸ்துதியை சொல்லியோ அல்லது "ஓம் குபேராய நமஹ..." என்று மந்திரம் உச்சரித்தோ பூக்களை கலசத்தின் மீது போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.
 
அர்ச்சனை முடிந்ததும், வாழைப்பழம், பாயாசம் போன்றவற்றை நைவேத்யம் செய்து, கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும்! - இன்றைய ராசி பலன்கள் (15.10.2025)!