Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துன்பங்களிலிருந்து விடுபட சொல்ல வேண்டிய சனிபகவான் மந்திரங்கள்

துன்பங்களிலிருந்து விடுபட சொல்ல வேண்டிய சனிபகவான் மந்திரங்கள்

துன்பங்களிலிருந்து விடுபட சொல்ல வேண்டிய சனிபகவான் மந்திரங்கள்
நவக்கிரகங்களில் வலிமையான கிரகமாகத் திகழ்பவர் சனி பகவான். சனியைப் போல் கொடுப்பவருமில்லை; சனியைப் போல் கெடுப்பவருமில்லை என்பர்.


 


எனவே சனிக்கிரக தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்யக் கூடிய முக்கியத் தலமாகத் திகழ்வது திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயம். 
 
இங்கே கோயில் கொண்டு அருள் புரியும் சனி பகவானை வழிபடுபவர்களுக்கு சனி தோஷ நிவர்த்தி கிடைக்கப் பெற்று எல்லாத் துன்பங்களையும் சனிபகவான் போக்குவதுடன் அவர்களுக்கு நீண்ட ஆயுளைத் தருவார்.
 
உங்களுக்கு ஏழரை சனியா?  அஷ்டம சனியா? இந்த மத்திரத்தை சொல்லுங்க.  சனி பகவானின் கருணை உங்களுக்கு கிடைக்கும்.
 
சனி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சனி தசை அல்லது சனி அந்தர் தசையின் போது: சனியின் கடவுளான அனுமனைத் தினமும் வழிபடவேண்டும். தினசரி அனுமன் சாலிசா அல்லது அனுமான் ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.
 
சனி மூல மந்திர ஜபம்:
"ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ", - 40 நாட்களில் 19000 முறை சொல்ல வேண்டும்.
 
சனி ஸ்தோத்திரம்:
நீலாஞ்ஜன ஸமாபாஸம் 
ரவிபுத்ரம் யமாக்ரஜம்! 
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் 
தம் நமாமி சனைச்சரம்!!
 
தமிழில்: 
சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா!!
 
தொண்டு: 
சனிக்கிழமையன்று நன்கொடையாக ஒரு எருமை அல்லது எள் விதைகள் கொடுக்கவேண்டும்.
நோன்பு நாள்: சனிக்கிழமை.
பூஜை: அனுமான் பூஜை.
ருத்ராட்சம்: 14 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.
 
சனி காயத்ரி மந்திரம்:
காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி|
தந்நோ மந்த: ப்ரசோதயாத்||
 
சனி தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் பாலா காண்டத்தின், 30 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும். அனைத்து சனி தொடர்பான பிரச்சனைக்கும் தசரத சனி ஸ்தோத்திரம் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வருமானம் தரும் வடக்கு ஜன்னல்