Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாத சிவராத்திரியில் விரதம் இருப்பதால் இத்தனை பலன்களா...?

Advertiesment
Shivratri fast 1
, சனி, 24 செப்டம்பர் 2022 (15:37 IST)
மாத சிவராத்திரி நாளில், சிவ வழிபாடு செய்வதும், சிவ தரிசனம் செய்வதும், நமசிவாயம் சொல்லி வணங்குவதும் மகத்தான பலன்களை தந்தருளும் என்பது ஐதீகம். சிவராத்திரியில் பல வகைகள் காணப்படுகின்றன. அவை மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று குறிப்பிடப்பட்டு வருகின்றது.


குறிப்பாக மாசி மாதம் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி அன்று அமாவாசைக்கு முந்தைய நாள் அனுஷ்டிக்கப்படும் சிவராத்திரி தான் மகா சிவராத்திரி என்று கொண்டாடப்பட்டு வருகிறது.

புராணங்களில் மகா சிவராத்திரியை குறித்த பல கதைகள் வழக்கத்தில் உள்ளன. எல்லா கதைகளிலும் குறிப்பிடப்பட்டு கூறப்படும் ஒரு பலன் என்றால் அது ‘இறுதி மோட்சம்’ என்பது தான். மகா சிவராத்திரியில் விரதம் இருப்போருக்கு நினைத்த காரியங்கள் கைகூடும்.

பொருளாதார முன்னேற்றம் அடைந்து சகல வளங்களும் வெகுவிரைவில் கிட்டும். வேண்டிய வேண்டுதல்கள் எல்லாம் தடையின்றி நிறைவேறும். அனைத்து பாவங்களும் நீங்கி இறுதியில் சிவபெருமானின் திருவடியை அடைந்து மோட்சம் பெறுவோம்.

மாத சிவராத்திரிகளில் விரதம் இருந்து முடிந்தவரை இயலாதவர்களுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். இவ்வாறு முறையாக வழிபடுவதன் மூலம் இறுதி காலத்தில் நிம்மதியாக வாழ்ந்துவிட்டு மோட்சம் அடையலாம். சிவனை நினைத்து நெஞ்சுருகி விழித்திருப்பதன் மூலம் மகாசிவராத்திரியின் முழு பலனையும்" அடையலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சனிக்கிழமையில் சதுர்த்தி விரதத்தை மேற்கொண்டால் என்ன பலன்கள்....?