சகல செல்வத்தையும் அளிக்கொடுக்கும் சனிக்கிழமை விரதம்!!

Webdunia
சனி, 26 மார்ச் 2022 (09:27 IST)
செல்வம், ஆயுள், ஆரோக்கியம் இவை மூன்றும் மனிதனுக்கு மிக முக்கியமானதாகும்.


பணம் மனிதனுக்கு மிக முக்கியமான பொருளாகும். அதை அனுபவிக்க ஆயுள் வேண்டும். 
ஆயுள் நீடிக்க வேண்டும் என்றால் ஆரோக்கியம் வேண்டும். இவை அனைத்தும் நிறைந்தால் மட்டுமே மனித வாழ்க்கை மிக சந்தோஷமாக இருக்கும். அதற்கு சனி விரதம் கடைப்பிடித்தல் வேண்டும்.
 
நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்பர். அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுள்காலம் அமையும். ஆனால், அந்த கிரகத்தைக் கட்டுப்படுத்துபவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதி அவரே.
 
சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது ஆயிற்று. இந்த விரதத்தை அனுஷ்டிக்க உண்மையான பக்தியே தேவையான பொருள். பாவங்கள் குறைந்து நீண்ட ஆயுள்  வேண்டும் என்று எண்ணும் மனிதனுக்கு இந்த சனி விரதமே பரிகாரம்.
 
சனிக்கிழமை விரதம் எளிமையானது. பகலில் பழம், தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் பெருமாளுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.
 
சனிக்கிழமை விரதம் எல்லா மாதங்களிலும் கடைப்பிடிக்கலாம். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம். சனிக்கிழமை விரதத்தை கடைப்பிடித்தால் சகல  செல்வமும் பெற்று வாழலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று கார்த்திகை தீபம்: விளக்கு ஏற்றுவதன் முறைகளும் பலன்களும்!

திருப்பதி வைகுண்ட ஏகாதசி: 24 லட்சம் விண்ணப்பங்கள்; இன்று குலுக்கல்!

திருவண்ணாமலை கிரிவலம்: இந்த மாத பௌர்ணமிக்கான உகந்த நேரம் அறிவிப்பு!

ஞானம், கல்வி அருளும் கும்பேஸ்வரர்: கும்பகோணம் ஆலயச் சிறப்புகள்!

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயில்: நாய் வாகனமில்லா யோக பைரவர் தரிசனம்

அடுத்த கட்டுரையில்
Show comments