Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவது ஏன் தெரியுமா...?

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (08:45 IST)
மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் அருள்கிறார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. நாம் குறிப்பிடும் ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள், அந்த நாளின் அதிகாலைப் பொழுது மார்கழி.

 
தேவர்களது பிரம்ம முகூர்த்த காலமாகிய மார்கழியில், இறைவனை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும் என்கின்றன சாஸ்திரங்கள்.
 
'மாரி' என்ற வார்த்தையிலிருந்து உண்டானது 'மார்' என்பது. 'மாரி' என்றால் மழை என்று பொருள். 'கழி' என்றால் 'கழிந்த' அல்லது 'பின்னர்' என்று அர்த்தம். எனவே, மழைகாலம் முடிந்த பின்னர் ஆரம்பிக்கும் மாதம் என்று பொருள்.
 
சைவ ஆலயங்களிலும், வைணவ ஆலயங்களிலும் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பூஜை, ஆராதனை நடத்தப்படும். மேளதாள  வாத்தியங்கள் முழங்கப்படும். சிவாலயங்களில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியும், விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவையும் பாடப்படும்.  விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.

திருப்பாவை என்றாலே நம் நினைவிற்கு வருவது ஆண்டாள் தான். ஆண்டாள் கிருஷ்ணரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார். திருப்பாவை ஆண்டாளின் வழிபாட்டை வெளிப்படுத்தும் ஒரு படைப்பாகும்.
 
மார்கழி மாதத்திற்கு சூன்ய மாதம் என்ற பெயரும் உண்டு சூன்யம் என்றால், ஒன்றுமில்லாதது எனப் பொருள். நம் வாழ்க்கை ஒன்றுமில்லாதது, நிலையற்றது. இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி கொள்ள வேண்டுமானால், சரணாகதி எனும் உயர் தத்துவத்தை கடைபிடிக்க வேண்டும்.
 
மார்கழி மாதத்தை, "மார்கசீர்ஷம்" என்று வடமொழியில் சொல்வர். ‘மார்கம்” என்றால், வழி - "சீர்ஷம்" என்றால், உயர்ந்த - "வழிகளுக்குள் தலைசிறந்தது" என்பது இதன் பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது. இறைவனை அடையும் உயர்வழியே சரணாகதி. “உன்னைத் தவிர யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்; நீ வந்து என்னை ஆட்கொள்…" என, இந்தப் பூமியில் பிறந்த ஆண்டாள், திருமாலைச் சரணடைந்தாள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆதாயம் தரும் ஆகஸ்டு மாத ராசிபலன், அதிர்ஷ்ட நாட்கள்! – மீனம்

ஆதாயம் தரும் ஆகஸ்டு மாத ராசிபலன், அதிர்ஷ்ட நாட்கள்! – கும்பம்

ஆதாயம் தரும் ஆகஸ்டு மாத ராசிபலன், அதிர்ஷ்ட நாட்கள்! – மகரம்

ஆதாயம் தரும் ஆகஸ்டு மாத ராசிபலன், அதிர்ஷ்ட நாட்கள்! – தனுசு

ஆதாயம் தரும் ஆகஸ்டு மாத ராசிபலன், அதிர்ஷ்ட நாட்கள்! – விருச்சிகம்

அடுத்த கட்டுரையில்
Show comments