தைப்பூசத்தில் பக்தர்கள் முருக பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

Prasanth Karthick
செவ்வாய், 23 ஜனவரி 2024 (18:26 IST)
தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வரும் நாள் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில்தான் முருக பெருமானுக்கு சூரனை வதம் செய்ய வேலாயுத்ததை தேவி உமையாள வழங்கியதாக கூறுகிறது ஸ்கந்த புராணம். முருகப்பெருமானுக்கும், தைப்பூசத்திற்கும் உள்ள இத்தகைய தொடர்பின் காரணமாகவே இந்த நாளில் அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு விழாக்கள்  நடத்தப்படுகின்றன.


 
போர் தெய்வமான கொற்றவையின் அருள் பெற்ற முருகபெருமான் என திருமுருகாற்றுப்படையில் முருக பெருமானை ‘கொற்றவை மைந்த’ என குறிப்பிடுகிறார் நக்கீரனார். அவ்வாறு போர் குணம் கொண்ட வீர திருமகனாக விளங்கும் முருக பெருமான் எதிரிகளையும், துஷ்ட சக்திகளை நிர்மூலம் செய்யும் வேலை தனது ஆயுதமாக கொண்டு அருள் பாலிக்கிறார்.

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விரதம் இருந்து ஆயிரக்கணக்கான முருக அடியார்கள் பாத யாத்திரையாக வருகிறார்கள். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து  விரதத்தை தொடங்குவார்கள்.

சஷ்டிகவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து  விரதத்தை முடிப்பார்கள். 

ALSO READ: முருக காவடியில் எத்தனை வகைகள்? எந்த காவடி எடுத்தால் என்னென்ன நன்மைகள்?
 
ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச்  சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். முருகன் உறையும் எல்லா தலங்களிலுமே காவடி எடுக்கும் பக்தர்கள் உள்ளனர். 

தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில்,  முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் அவர்களைப் பீடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப் பூர்வமாக அனுபவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு நிதானம் நன்மை தரும்! - இன்றைய ராசி பலன்கள் (31.10.2025)!

நலம் தரும் நவம்பர் மாத ராசிபலன்கள் 2025! – துலாம்!

நலம் தரும் நவம்பர் மாத ராசிபலன்கள் 2025! – கன்னி!

நலம் தரும் நவம்பர் மாத ராசிபலன்கள் 2025! – சிம்மம்!

நலம் தரும் நவம்பர் மாத ராசிபலன்கள் 2025! – கடகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments