சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

Webdunia
செவ்வாய், 2 மே 2023 (22:08 IST)
விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு அருகேயுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு அருகேயுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில். இந்தியக் கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு  நடத்த  4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  நாளை முதல்   சித்திரை  மாதம் பிரதோஷம் – அமாவாசை வழிபாட்டையொட்டி, பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனவே,   வரும் சித்திரை மாத பவுர்ணமி 5 ஆம் தேதி,3 ஆம் தேதி பிரதோஷம், என்பதால், வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டடுள்ளது.
 அதன்படி நாளை முதல் 6 ஆம் தேதி வரை 4 நாட்ககள் பக்தர்கள் சதுரரகிரி மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதில், 10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள், மற்றும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும்தான் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டுசெல்ல அனுமதியில்லை என்றும்,  நீரோடையில் குளிக்ககூடாது என்று வனத்துறை கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியாவிலேயே பெரிய விநாயகர்!.. கோவை முந்தி விநாயகரின் சிறப்புகள்!...

ஈஷா மஹாசிவராத்திரி!.. ஆதியோகி ரத யாத்திரை !.. திருநெல்வேலிக்கு 23-ஆம் தேதி வருகை ..

ஈஷா மஹாசிவராத்திரி!.. வேலூருக்கு வரும் ஆதியோகி ரத யாத்திரை !...

ஏப்ரல் மாதம் திருப்பதி கோவிலுக்கு போறீங்களா?!.. டோக்கன் மற்றும் தங்கும் அறைகள் விபரம்!..

தை அமாவசையில் முன்னோருக்கு சமர்ப்பணம்!.. ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்!..

அடுத்த கட்டுரையில்
Show comments