Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2023 (23:26 IST)
விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு அருகேயுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல 19 ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு அருகேயுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில். இந்தியக் கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு  நடத்த  4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வரும் 19 ஆம் தேதி பங்குனி மாதம் பிரதோஷம் – அமாவாசை வழிபாட்டையொட்டி, பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, வரும் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் 22 ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்யலாம் என்றாலும், இதில், 10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள், மற்றும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், காலை 7 மணிமுதல் இரவு 7 மணிவரை மட்டுமே பக்தர்கள் மலையில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2025 New Year Horoscope: 2025 புத்தாண்டு ராசிபலன் – மகரம் | Magaram 2025 Rasipalan

இந்த ராசிக்காரர்களுக்கு நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும்!– இன்றைய ராசி பலன்கள்(17.12.2024)!

திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் சிறப்புகள்..!

2025 New Year Horoscope: 2025 புத்தாண்டு ராசிபலன் – தனுசு | Dhanusu 2025 Rasipalan

2025 New Year Horoscope: 2025 புத்தாண்டு ராசிபலன் – விருச்சிகம் | Viruchigam 2025 Rasipalan

அடுத்த கட்டுரையில்
Show comments