Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாதீப தரிசனத்திற்கு 2500 பக்தர்களை அனுமதிப்பது சாத்தியமில்லை: ஆலோசனை கூட்டத்தில் முடிவு..!

Mahendran
திங்கள், 9 டிசம்பர் 2024 (20:04 IST)
திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் 2,500 பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு 2,500 பக்தர்களை அனுமதிப்பது சாத்தியமில்லை என்று ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருவண்ணாமலை மகாதீப தரிசனத்திற்கு ஆண்டுதோறும் 2,500 பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு மண் சரிவு ஏற்பட்டு ஏழு பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்த ஆண்டு மலையேற பக்தர்களை அனுமதிக்க குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அமைச்சர்கள் எ.வ. வேலு, சேகர்பாபு தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை ஐஐடி வல்லுநர்களும் கலந்து கொண்டனர். ஆலோசனையின் இறுதியில் மகா தீப மலையில் பல இடங்களில் ஈரப்பதம் இருப்பதால், பக்தர்களை மலையேற அனுமதிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில், இந்த ஆண்டு மகா தீப தரிசனத்திற்கு 2,500 பக்தர்களை அனுமதிப்பது சாத்தியமில்லை என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து அரசு விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அருள்மிகு பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதர் கோவில் சிறப்புகள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு திட்டமிட்டபடி காரியங்கள் நடக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (05.12.2024)!

சுவாமிமலை கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா: நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

திருக்கார்த்திகை தீபத் திருவிழா! கொடியேற்றத்துடன் தொடங்கிய கோலாகல விழா!

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து திருப்தி அளிக்கும்! - இன்றைய ராசி பலன் (04.12.2024)!

அடுத்த கட்டுரையில்
Show comments