குரு பிரகஸ்பதிதான், நவக்கிரகங்களில் குரு பகவானாகத் திகழ்கிறார். அதேபோல், குரு ஸ்தானத்தில் குரு தட்சிணாமூர்த்தியே காட்சி தருவதால், சிவ சொரூபமாகத் திகழும் தென்முகக் கடவுளாம் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வணங்கினால், புத்தியில் தெளிவும் செயலில் திண்மையும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
தட்சிணாமூர்த்தி மூலமந்திரம்:
ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே
மஹ்யம் மேதாம் பிரக்ஞாம் ப்ரயச்ச நமஹ;
என்பது ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு உரிய மூலமந்திரம். சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை தினமும் காலையில் பாராயணம் செய்வது ரொம்பவே விசேஷம். நற்பலன்களையெல்லாம் வழங்கும்.
அதேபோல், வியாழக்கிழமைகளிலும் பௌர்ணமி தினங்களிலும் சிவன் கோயிலில், கோஷ்டத்தில் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்திக்கு எதிரே அமர்ந்துகொண்டு இந்த மந்திரத்தைச் சொல்லி ஜபிக்கலாம். தம்பதி சமேதராக இருந்து இந்த மந்திரத்தை பாராயணம் செய்து வழிபட்டால், தம்பதி இடையே ஒற்றுமை அதிகரிக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரம்:
ஓம் தட்சிணாமூர்த்தியே வித்மஹே
த்யாநஸ்தாய தீமஹி
தந்நோ தீஸஹ் ப்ரசோதயாத் !
வீட்டில் பூஜையறையில் அமர்ந்துகொண்டு, தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரத்தையும் மூல மந்திரத்தையும் ஜபித்து வாருங்கள். வீட்டில் உள்ள தரித்திர நிலை மாறிவிடும். சுபிட்சமும் ஐஸ்வரியமும் குடிகொள்ளும். மாணவர்கள், கல்வி கேள்விகளில் சிறந்துவிளங்குவார்கள் என்பது ஐதீகம்.
தட்சிணாணாமூர்த்தி வடிவம் 32-ஆவது வடிவமாகக் காட்டப்பட்டுள்ளது. தேவியோடு அருள்பாலிக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி அனைத்து சிவாலயங்களிலும் கருவறையின் தென்புறக்கோஷ்டத்தில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தியை நாம் தரிசிக்கலாம்.
சிவபெருமானின் 64 திருமேனி வடிவங்களில் தட்சிணாமூர்த்தி வடிவம் 32-ஆவது வடிவமாகக் காட்டப்பட்டுள்ளது. தேவகுருவான பிரஹஸ்பதி தட்சிணாமூர்த்தியின் அம்சமாகத் திகழ்வதாக ஐதீகம்.