Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோ துவாதசி தினத்தில் கோ பூஜை.. குழந்தைகளின் நலம் காக்க உதவும் பூஜை..!

Advertiesment
Cow Pooja

Mahendran

, திங்கள், 14 அக்டோபர் 2024 (18:30 IST)
கோ துவாதசி தினத்தன்று  கோ பூஜை செய்தால், குழந்தைகள் நலமாக இருப்பார்கள் என்று முன்னோர்கள் கூறி வருகின்றனர். 
 
பொதுவாக காலண்டரில் "கோ துவாதசி" என்ற வார்த்தை அனைவரின் கண்ணிலும் பட்டிருக்கும். இது மிகவும் முக்கியமான வழிபாட்டு தினங்களில் ஒன்றாகும். கடன் உள்ளிட்ட பல பிரச்சினைகளால் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கோ துவாதசி அன்று கோ பூஜை செய்தால் மன நிம்மதி அடைவார்கள் என்று சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
 
அதேபோல், பசுவின் உடலில் சகல தேவர்களும் வசிக்கிறார்கள் என்று நம்பப்படும் நிலையில், பசுக்களை வலம் வந்து வணங்குவது அனைத்து தேவர்களையும் வணங்குவதற்கு சமம் என்று கூறப்படுகிறது. தானங்களில் சிறந்தது "கோ தானம்" என்று சொல்லப்படும் நிலையில், அப்படிப்பட்ட பசுவுக்கு கோ துவாதசி தினத்தில் பூஜை செய்தால் நம் வாரிசுகள், குறிப்பாக குழந்தைகள், நன்மை பெறுவார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.
 
கோ துவாதசி தினத்தில், காலை அல்லது மாலை, கன்றுடன் கூடிய பசுவினை நீராட்டி, மஞ்சள், குங்குமம், இட்டு அலங்கரித்து பூஜை செய்ய வேண்டும், அதன்பின்னர் பசுவுடன் பால் அருந்துமாறு கன்றை செய்வது நன்மை தரும். இவ்வாறு செய்தால் நமது குழந்தைகளுக்கு நலம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்களுக்கு காரிய தடை, தாமதம் ஏற்படலாம்!– இன்றைய ராசி பலன்கள்(13.10.2024)!