Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கஜலக்ஷ்மி விரதம் இருந்து வழிபடுவதால் உணாடாகும் பலன்கள் !!

Goddess Gajalakshmi
, திங்கள், 5 செப்டம்பர் 2022 (14:26 IST)
கஜலட்சுமி பூஜையை ஆவணி மாதம் வளர்பிறை தசமி நாளில் சிறப்பானது. நிலம், வீடு, தோட்டம் போன்ற அசையாத சொத்துக்களை கொடுக்கும் கஜ லட்சுமி தாயாரை பெண்கள் ஆவணி தசமி திதி நாளன்று பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். கஜலக்ஷ்மி விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு எத்தகைய தீய எண்ணங்களும் ஒழிந்து கருணையே வடிவமாகத் திகழும் ஞானம் பிறக்கும்.


அஷ்டலட்சுமிகளில் சிறப்பான வடிவமாகப் போற்றப்படுபவள், கஜலட்சுமி. பார்க்கடலைக் கடைந்தபோது வெளியான திருமகளை, அஷ்ட திக்கிலும் இருந்த தேவயானைகள் கூடிவந்து, தங்களது மனைவியரோடு மங்கள நீராட்டி, பிளிறலை எழுப்பி வழிபட்டன என்று புராணங்கள் சொல்கின்றன. எனவேதான் ஆதிலட்சுமி, கஜலட்சுமி என்று போற்றப்படுகிறாள்.

அஷ்டலட்சுமிகளில், கஜலட்சுமி நடுநாயகமாக வீற்றிருப்பவள். இவள், நம் வீட்டின் நிலைப்படிமேல் அமர்ந்துள்ளதால், திருநிலை நாயகி என்றும் அழைக்கப்படுகிறாள். தாமரை மலரில் பத்மாசன நிலையில் திருமகள் வீற்றிருக்க, இருபுறமும் தேவ யானைகள் நின்று புனித நீரால் அபிஷேகம் செய்யும் நிலையில் கஜலட்சுமி இருப்பாள். சில படங்களில், யானைகள் லட்சுமிக்கு கவரி வீசுவது போலவும் காணப்படும்.

அன்னை மகாலட்சுமி செல்வத்திற்கு அதிபதி. மனித வாழ்வு வளம் பெற தேவையான செல்வம், புகழ், ஆளுமை ஆகிய மூன்றையும், தருபவள் இவள் தான். குறிப்பாக, மன்னர்களிடத்தில், அதாவது ஆளுமை திறன் உள்ளவர்களிடத்தில், வாசம் செய்பவள் ராஜலட்சுமி. ஆவணி மாதம் வளர்பிறை தசமியன்று, விரதமிருந்து, கஜலட்சுமிக்கு பூஜை செய்தால், செல்வம், புகழ், ஆளுமை மூன்றையும் தருவாள். ஆவணி மாத வளர்பிறையில் தசமி திதி அன்று கஜலட்சுமி விரதம் இருந்து வழிபட்டால் எல்லா செல்வங்களும் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அற்புத பலன்களை தரும் சோமவார விரதத்தை எப்போது மேற்கொள்வது...?