ஆன்மீகத்தில் ஒரு செயலை செய்யும்போது கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தால், அந்த செயல் நல்லதாகவே அமையும்.
அது போன்றதுதான் நாம் ஆன்மிகத்தில் பின்பற்றும் சில பழக்க வழக்கங்கள். மேலோட்டமாக பார்க்கும்போது இவை சாதரணமானதாக் தெரியலாம். ஆழ்ந்து நோக்கினால் அதன் உண்மைப் பொருளை உணரலாம்.
சில நம்பிக்கைகள்....
1. மளிகை பொருட்களை மற்ற நாட்களில் வாங்கிவிட்டு உப்பு மட்டும் வெள்ளிக்கிழமைகளில் வாங்கினால் வீட்டில் செல்வம் எப்போதும் சேர்ந்து கொண்டே இருக்கும்.
2. அஷ்டமி, நவமி நாட்களில் வெளியே செல்ல நேர்ந்தால் துளசி செடியை வலமாக 3 முறை வலம்வந்து வணங்கிச் சென்றால் நினைத்த காரியம் கைகூடும்.
3. செவ்வாய், வெள்ளி, பவுர்ணமி நாட்களில் வீட்டில் குத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது சகல சந்தோஷத்தையும் அள்ளித்தரும்.
4. உப்பு, வெந்தயம், கருப்பு எள் ஆகியவற்றை சிறிது இடித்து அதை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வீட்டின் தென்மேற்கு மூலையில் (கன்னிமூலை) வைத்து விட்டால், வரவேண்டிய பணம் விரைவில் வந்து சேரும். 48 நாட்களுக்கு ஒருமுறை வெள்ளைத்துணியை பிரித்து மாற்றிக் கொள்ளலாம்.
5. வீட்டிற்கு வருபவர்களுக்கு குங்குமம் கொடுப்பது பண்டைய தமிழர்களின் மரபு. அதை வீட்டிற்கு வந்தவுடன் கொடுக்க வேண்டும். வந்தவர்கள் வெளியே செல்லும்போது கொடுத்தால் ந்ம் வீட்டின் சக்தி அவர்களுடன் சென்றுவிடும் என்பது ந்ம்பிக்கை.