அஷ்டமி தினத்தில் அதிலும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் பைரவரை வணங்கினால் ஏராளமான பலன் கிடைக்கும் என முன்னோர்கள் கூறியுள்ளனர்.
பைரவர் என்றாலே பயத்தை போக்குவர். என்பதும் பாவத்தை நீக்குபவர் என்பதும் பொருள் என்பது முன்னோர்களின் கூற்றாக உள்ளது. எனவே ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் பைரவ வழிபாடு செய்தால் ஏராளமான பலன்களை கிடைக்கும் என்பது முன்னோர்களின் கூற்றாக உள்ளது.
ஒவ்வொரு ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனின் அம்சம் என்பதும் பைரவருக்கு பௌர்ணமிக்கு பின் வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
சிவன் ரூபத்தில் இருக்கும் பைரவருக்கு மிகவும் பிடித்தமானது தயிர் சாதம் என்பதும் தயிர்சாதத்தை நைவேத்தியமாக செய்து பைரவருக்கு படைக்கலாம் என்றும் அதேபோல் சிவப்பு நிற மலர்களை கொண்டு பைரவருக்கு அர்ச்சனை செய்தால் ஏராளமான பலன்கள் கிடைக்கும் என்றும் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் பைரவரை வணங்கி பலன்களை பெற்றுக் கொள்ளுங்கள் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.