கரூர் வெங்கமேடு விவிஜி நகர் அருள்மிகு ஸ்ரீ மஹா சக்தி மாரியம்மன் திருக்கோயில் 28 ம் ஆண்டு திருவிழா காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் துவக்கம்.
கரூர் அருகே உள்ள வெங்கமேடு விவிஜி நகர் அருள்மிகு ஸ்ரீ மஹா சக்தி மாரியம்மன் ஆலயத்தின் 28 ம் ஆண்டு திருவிழா நிகழ்ச்சி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதனை தொடர்ந்து வரும் 21 ம் தேதி இரவு 8 மணிக்கு பூச்செரிதழ் நிகழ்ச்சியும், வரும் 24 ம் தேதி மதியம் அம்மனுக்கு அபிஷேகம் அதனை தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை நிகழ்ச்சியும், அன்று மாலை கரகம் பாலித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. மாரியம்மன் ஆலயங்களில் மிகவும் தொன்மை வாய்ந்ததாக கூறப்படும் மாரியம்மன் ஆலயமான, இந்த வெங்கமேடு விவிஜி நகர் மகா சக்தி மாரியம்மன் ஆலய விஷேசம் தமிழக அளவில் பிரசித்தி பெற்ற விஷேசங்களில் ஒன்றாகும். மேலும், இந்த ஆலயத்தில் வரும் 24 ம் தேதி பால் குடம், அலகு குத்துதல், அக்னிசட்டி எடுத்தல், மாலை பொங்கல், மாவிளக்கு மற்றும் சிறப்பு வழிபாட்டுடன் அன்று இரவு 7 மணிக்கு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.