வொயிட் ஹெட்ஸ், பிளாக் ஹெட்ஸ் பிரச்சனைகள் பெரும்பாலும் அதிக எண்ணெய் பசை சருமத்தினருக்குத்தான் வரும். மேலும் இந்த பிரச்சனை ஹார்மோன்கள் மற்றும் மரபணுக்களாலும் வரும்.
வொயிட் ஹெட்ஸ் சருமத்துளைகளில் அழுக்குகள், இறந்த செல்கள் அல்லது அதிகப்படியான எண்ணெய் சுரப்பால் அடைப்பு ஏற்படுவதால் வரும். இவற்றை நீக்குவது சற்று கடினமானது.
பேக்கிங் சோடா: பேக்கிங் சோடா நீர் கொண்டு பேஸ்ட் செய்து வொயிட் ஹெட்ஸ் உள்ள இடத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து ஸ்கரப் செய்து பின் கழுவ வேண்டும். இதனை வாரத்தில் 2 முறை செய்துவந்தால் நல்ல பலன் கிடக்கும். பிறகு தவறாமல் டோனரைப் பயன்படுத்த் வேண்டும்.
ஆவிப் பிடிப்பது: ஆவிபிடிப்பதால் சருமத்தில் உல்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு, சருமம் பளிச்சென்று பொலிவோடு இருக்கும். பின்னர் சுத்தமான துணியால் சருமத்தை நன்கு துடைத்து எடுக்க வேண்டும்.
சர்க்கரை ஸ்கரப்: சர்க்கரை எலுமிச்சை சார்றுடன் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள வொயிட் ஹெட்ஸ், பிளாக் ஹெட்ஸ் போன்றவை முழுமையாக வெளியேறும்.
பட்டை மாஸ்க்: பட்டை பொடியுடன் தேன் சேர்த்து கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்துக் கழுவ வேண்டும். இதனால் அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வொயிட் ஹெட்ஸ் மட்டுமின்றி முகப்பருக்களையும் போக்கும்.
ஆப்பிள் சீடர் வினிகர்: ஆப்பிள் சீடர் வினிகரை வெதுவெதுப்பான நீருடன் சரிசம அளவில் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து, நீரில் நனைத்த பஞ்சை வைத்து துடைத்து எடுக்க வேண்டும்.
ஓட்ஸை பொடி செய்து தயிர் சேர்த்து கலந்து, மூக்கு, கன்னம் மற்றும் தாடை பகுதிகளில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள வெண்புள்ளிகள் நீங்குவதோடு, சருமமும் வறட்சி அடையாமல் மென்மையாக இருக்கும்.