Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமையலறை பொருட்களை வைத்தே முகத்தின் கரும்புள்ளிகளை நீக்க குறிப்புக்கள் !!

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (14:20 IST)
நம் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்கள் மட்டுமே போதும். கண்ட கண்ட கிரீம்களை வாங்கி தான் போட வேண்டும் என்ற அவசியமில்லை.

கொத்தமல்லி இலையானது உணவுக்கு நறுமனத்தையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருவதோடு மட்டுமல்லாமல் உங்களது சருமத்திற்கு அழகையும் கொடுக்கிறது. கொத்தமல்லி இலையுடன் மஞ்சளை சேர்த்து அரைத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவி விட வேண்டும். இதனால் கரும்புள்ளிகள் விரைவாக மறைந்துவிடும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்ய வேண்டும்.
 
எலுமிச்சை சாறுடன் சிறிதளவு சர்க்கரையை கலந்து முகத்தில் 5 முதல் 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்குவதோடு, முகம் பளபளப்பாக இருக்கும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் நீங்கும்.
 
தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு 1, மாதுளை விதைகள் 1/2 பௌல், எலுமிச்சை 1/2, ஐஸ் ட்ரே 1, செய்முறை: முதலில் உருளைக்கிழங்கை நீரில் நன்கு கழுவி, அதன் தோலை சீவி அகற்ற வேண்டும். பின் அதை துருவிக் கொள்ளவும்.
 
மிக்ஸியில் உருளைக்கிழங்கு, மாதுளை மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து நன்கு கலக்கவும். அடுத்து ஐஸ் ட்ரேயில் இந்த கலவையை ஊற்றி நிரப்பி, ஃப்ரீசரில் 5-6 மணிநேரம் வைத்து உறைய வைக்க வேண்டும்.
 
பிறகு அந்த ஐஸ் கட்டியைக் கொண்டு கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 1-2 ஐஸ் கட்டிகளைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால், மூன்றே நாட்களில் கரும்புள்ளிகள் முற்றிலும் மறைந்துவிடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments