Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமுடி பிரச்சனைகளை நீக்கி முடி வளர உதவும் குறிப்புகள் !!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (18:28 IST)
கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.
 
ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.
 
காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.
 
அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்து குளிக்க வேண்டும்.
 
மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.
 
தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும். முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.
 
கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
 
காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்வதேச மீள் உருவாக்க மருத்துவம்! ரீஜென் 2025 மாநாடு! - பிளாஸ்மா சிகிச்சைக்கு வழிகாட்டுதல்கள்!

தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன? செய்ய கூடாதது என்ன?

ABC ஜூஸின் முக்கிய நன்மைகள். தினமும் அருந்துவதால் கிடைக்கும் முக்கியப் பயன்கள்

கூந்தல் பராமரிப்பு: நெல்லிக்காய் - முடி பலத்திற்கும் அடர்த்திக்கும்!

தினசரி ஓட்டம்: உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான அற்புத மருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments