வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இயற்கையான முறையில் முகத்தை அழகாக வைத்துக்கொள்வது எப்படி...? செயற்கை அழகு கிரீம்கள் முகத்தில் பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இதில் இயற்கையான முறையில் அழகை எப்படி பாதுகாப்பது என்பதைப் பார்ப்போம்.
பாதாம் பருப்புகளை பாலுடன் சேர்த்து நன்றாக அரைத்து கண்களைச் சுற்றி பேக் போடுவதால் கண்களில் உள்ள கருவளையம் மறையும்.
எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவினால், முகத்தில் கரும்புள்ளிகள் குறையும்.
கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் கொண்ட கலவையை உதடு வெடிப்பின் மீது பூசி வந்தால் வெடிப்புகள் மறைந்து உதடுகள் மென்மையாகும்.
பாலாடை குங்குமப் பூ கலந்து கழுத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவினால் சிறுசிறு கரும்புள்ளிகள் மறையும்.
பாதாம் எண்ணெயுடன் தேன் கலந்து நன்றாகக் குழைத்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் முகம் பிரகாசமாகும்.
மா மரத்தின் இலையை எடுத்து அதன் பாலைக் கால் வெடிப்பில் பூசி வந்தால் கால் வெடிப்பு குறையும்.
ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடாக்கி விரல்களின் மீது தேய்த்து ஊற வைத்தால் நகங்கள் உடையாமல் இருக்கும்.
நெல்லிக்காயை பாலில் அரைத்து பிழிந்து சாறு எடுத்து கொதிக்க வைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வந்தால் முடி நன்றாக வளரும்.
துளசி இலையுடன் கற்பூரம் சேர்த்து அரைத்து முகப்பரு மேல் பூசி வந்தால் முகப்பரு குறையும்.
ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடாக்கி விரல்களின் மீது தேய்த்து ஊற வைத்தால் நகங்கள் உடையாமல் இருக்கும்.