தேன்: தேன் சரும அழற்சியை குணப்படுத்தகூடியது. தேனை சருமத்துக்கு பயன்படுத்தும் போது காயங்கள், தீக்காயங்கள், டிகுபிரஸ் புண்களை குணப்படுத்தவும் தேன் பயன்படுத்துகிறது. தேன் பூஞ்சை காளான் மற்றும் ஆண்டிபாக்டீரியா பண்புகளை உடையது.
ரோஜா இதழ்கள்: சருமத்துக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் பராமரிப்பில் ரோஜா முக்கியமானது . சரும பராமரிப்பில் முக்கியமானது பன்னீர் என்பதை அனைவரும் அறிவோம். சருமத்தில் வெள்ளை திட்டுகள் இருந்தால் அதை தேனுடன் கலந்து மசித்து பயன்படுத்தினால் பித்தத்தால் வரும் வெள்ளை திட்டு குறையக்கூடும்.
முகப்பரு: பாகற்காய் நீரிழிவுக்கு மட்டும் அல்லாமல் இதை முகப்பருவின் மீது பயன்படுத்தும் போதும் பருக்களை குணப்படுத்த உதவுகிறது. பாகற்காயை சாறாக்கி முகப்பருக்கள் மீது பயன்படுத்தும் போது அவை வடுக்கள் இல்லாமல் குணமாகும். துளசியையும் முகப்பருவுக்கு பயன்படுத்தலாம்.
கிராம்பை பேஸ்ட் ஆக்கி முகப்பருவின் மீது தடவி கொள்ளலாம். எலுமிச்சை நீர்த்து முகப்பருவின் மீது தடவலாம். சரும தோஷங்களுக்கு ஏற்ப பயன்படுத்துவது அவசியம்.
கற்றாழை ஜெல்: சருமத்துக்கு உண்டாகும் காயங்களை வெகுவிரைவில் குணப்படுத்தும் பண்புகளை கற்றாழை ஜெல் இயற்கையாகவே கொண்டுள்ளது.
வெள்ளரிக்காய் இயற்கையாகவே சருமத்துக்கு எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்படுகிறது. சருமத்துக்கு உதவும் ஆயுர்வேத குறிப்புகள்: வெடிப்புகள் ஏற்பட்ட உதடுகளுக்கு வெண்ணெய் அல்லது நெய் தடவலாம். சந்தனம், மஞ்சள் மற்றும் சீசேம் எண்ணெய் நல்ல க்ளென்சர் ஆக பயன்படுத்தலாம்.