Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காஃபி தூளை கொண்டு முகத்தை அழகாக்க சில குறிப்புகள் !!

Advertiesment
Coffee Nut Face Pack
, சனி, 3 செப்டம்பர் 2022 (14:13 IST)
காஃபி தூள் நம் அனைவரின் வீட்டிலும் கட்டாயம் இருக்கும் ஒரு பொருளாகும். காஃபி தூள் நம்ம முகத்த அழகாக காட்டவும் பயன்படுகிறது.


முகத்திற்கு ஸ்கரப்பாக காபி தூளை பயன்படுத்தலாம். இது முகத்திற்கு கெமிக்கல்கள் கலந்த ஸ்கரப்பை போல கெடுதல் விளைவிக்காது. காபி பொடியில் சிறிதளவு சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில் கலந்து முகத்திற்கு வட்ட வடிவத்தில் மசாஜ் செய்வதன் மூலமாக முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க முடியும்.

காஃபி தூள் ஒரு கப் , ஏலக்காய் பொடி 2 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன் மற்றும் சர்க்கரை 1 கப் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். அதை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் முகம் மட்டுமல்லாது கை கால்களிலும் தேய்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். பின்னர் மிதமான நீரில் குளிக்கவும்.

ஒரு கப் காஃபி பொடியில் இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் ஸ்க்ரப் போல் 10 நிமிடங்களுக்கு தேய்த்து விடுங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும். இப்படி வாரம் ஒரு முறை செய்து பாருங்கள் நீங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு முகம் பளிச்சிடும்.

கற்றாழையை ஐந்து ஸ்பூன் எடுத்து மசித்துக்கொள்ளவும். அதோடு காஃபி பொடி ஒரு கப் கலந்து முகத்தில் 10 நிமிடங்களுக்கு ஸ்கர்ப் செய்யவும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

4 ஸ்பூன் காஃபி தூளில் ஒரு கப் பால் மற்றும் 2 ஸ்பூன் தேன் கலந்து முகம் கை , கால்கள் , கழுத்து போன்ற இடங்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவுவதால் நல்ல மாற்றம் தெரியும்.

4 ஸ்பூன் காஃபி தூள், 4 ஸ்பூன் பட்டர், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கெட்டியான பதத்தில் கலக்கவும். முகத்தில் மட்டுமல்லாது கை கால் , கழுத்து போன்ற இடங்களில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும். இதனை வாரம் ஒரு முறை செய்து வருவதால் நல்ல பலன் கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் 7,219 பாதிப்புகள்; 33 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!