Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகம் எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க உதவும் சில அழகு குறிப்புகள் !!

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (13:25 IST)
கற்றாழை குளிர்ச்சி தன்மை உடையது. இதனை இரவு தூங்க செல்லும் முன்பு முகத்தில் தடவி விடவும். பின்பு, காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்தால் முகத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.


இரவு தூங்க செல்லும் முன்பு விட்டமின் இ மாத்திரையில் இருந்து சிறிது எண்ணெய்யை எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து விட்டு காலையில் எழுந்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவி வந்தால் முகம் பளிச் என காணப்படும்.

வெள்ளரிக்காயில் அதிக அளவு ஈரப்பதம் உள்ளது. எனவே, இரவு தூங்க செல்லும் முன்பு வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி விடவும். பின்பு காலை, எழுந்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி வந்தால் முகம் பொலிவுடன் காணப்படும்.

பாதாம் எண்ணெய்யில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் விட்டமின் ஏ சத்து ,சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து, சருமத்தை அழகாக்குகிறது. பாதாம் எண்ணெய்யிலும் ஈரப்பதம் உள்ளது. எனவே, இதனையும் இரவு முகத்திற்கு தடவி மசாஜ் செய்து காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி வரலாம்.

பப்பாளி ஒரு இயற்கை அழகு சாதனமாக பயன்படுத்துகிறோம். பப்பாளிப்பழத்தில் பல வைட்டமின்கள் மற்றும் சிறந்த பண்புகள் உள்ளன. பப்பாளி முகத்திற்கு குளிர்ச்சியை கொடுக்கும். பப்பாளி துண்டுகளை நன்கு மசித்து முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் முகம் பளிச்சிடும்.

தக்காளி சாருடன் 1 ஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள கருமை நீங்கி வெண்மை நிறம் வெளிப்படும். தக்காளியில் கலந்திருக்கும் வைட்டமின் சி முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள் தோன்றுவதை கட்டுப்படுத்தும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திங்கட்கிழமைகளில் மாரடைப்பு அபாயம் அதிகம்: மருத்துவர்கள் எச்சரிக்கை!

சத்துக்கள் நிறைந்த ஈசல்: ஓர் அரிய உணவும், மருத்துவ குணங்களும்

இந்தியாவில் கூடும் எடை அதிகரிப்பு பிரச்சினை! 100 கோடிக்கு விற்பனையாகும் எடைக்குறைப்பு மருந்துகள்!

டிஷ்வாஷர்: இந்திய சமையல் பாத்திரங்களுக்கு ஏற்ற நவீன தீர்வு!

இந்தியாவில் ஐந்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய்: லான்செட் ஆய்வறிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments