Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டிலேயே ஃபேஷியல் செய்துக்கொள்ள எளிய வழிகள் !!

Webdunia
சிலர் மாதந்தோறும் பார்லருக்கு சென்று ஸ்கின்னை பராமரித்துக் கொள்வார்கள். ஆனால் சிலருக்கோ அதற்கெல்லாம் நேரம் இருக்காது. அப்படியானவர்கள்  பார்லருக்குப் போகாமல், வீட்டிலேயே ஃபேஷியல் செய்துக் கொள்ளலாம்.

சாக்லெட் சருமத்திற்கு மிகவும் நல்லது. சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் சாக்லெட் ஃபேஸ் மாஸ்க் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது சருமத்தை வறட்சியடையச் செய்வதோடு, அரிப்பை ஏற்படுத்தவும் செய்யும்.
 
பரங்கிக்காயில் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், இதனைக் கொண்டு ஃபேஸ் மாஸ்க் போட்டால், அது சருமத்திற்கு தேவையான வைட்டமின்களைத் தருவதோடு, சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்கும். அதற்கு இதனை மசித்து முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.
 
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன், சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன், தேன் - அரை டீஸ்பூன் ஆகியவற்றை கலந்து, முகத்தை ஸ்கிரப் செய்துக் கொள்ளவும். பின்னர்  காட்டன் வைத்து முகத்தை துடைக்கவும்.
 
க்ரீன் டீ சருமத்தை மென்மையாக்கவும், தேன் ப்ளீச்சிங் பொருளாகவும் செயல்படுவதால், இவற்றைக் கொண்டு மாஸ்க் போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.
 
திராட்சை சாற்றில் தேன் சேர்த்து கலந்து, சருமத்திற்கு மாஸ்க் போட்டால், அது சருமத்தில் உள்ள பருக்களால் வந்த தழும்புகளையும், வடுக்களையும் போக்கி, சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள உதவும்.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments