ஆரோக்கியமான மற்றும் அடர்த்தியான தலைமுடியை பெற எளிய குறிப்புகள் !!
அவகேடோ பழத்தில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் புரோட்டீன்கள், தலைமுடியின் வேர்களுக்கு ஊட்டமளித்து வலிமையடையச் செய்யும்.
அவகேடோ பழத்தை மசித்து தலையில் தடவி 1 மணிநேரம் ஊறவைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் அலச வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு ஒருமுறை மேற்கொள்ள சிறந்த பலன் கிடைக்கும்.
இரவில் படுக்கும் முன் ஆலிவ் ஆயிலை ஸ்கால்ப்பில் படும்படி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், மயிர்கால்கள் ஊட்டம் பெற்று வலிமையடையும்.
வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெய்யை தனியாக எடுத்து, அதை ஸ்கால்ப்பில் படும்படி தடவி 1 மணிநேரம் கழித்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலையை அலச வேண்டும். ஒரு வாரத்தில் 2 முறை இந்த செயலை செய்து வந்தால், மயிர்கால்கள் வலிமைப் பெறும்.
வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம், மயிர்கால்களை பலப்படுத்தும் மற்றும் தலைமுடி உடைவதைத் தடுக்கும். அதற்கு நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, தலை முழுவதும் தடவி 1 மணிநேரம் கழித்து, ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இந்த முறையை வாரம் ஒருமுறை மேற்கொள்ள வேண்டும்.
தேங்காய் க்ரீம்மை முடியின் வேர் முதல் முனை வரை தடவி 25 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இந்த முறையை மாதத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், தலைமுடி வலிமையடைந்திருப்பதை நன்கு காணலாம்.
பாதாம் எண்ணெயில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் மற்றும் இதர ஊட்டமளிக்கும் உட்பொருட்கள், மயிர்கால்களின் வலிமையை அதிகரிக்கும். எனவே இரவில் படுக்கும் முன் பாதாம் எண்ணெய்யை ஸ்கால்ப்பில் படும்படி தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
அடுத்த கட்டுரையில்