Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாதங்களை பராமரிக்க உதவும் எளிய அழகு குறிப்புகள்...!!

பாதங்களை பராமரிக்க உதவும் எளிய அழகு குறிப்புகள்...!!
பாதம் உள்ளங்கால் வறண்டு இருந்தால் 4 சொட்டு கிளிசரின் 4 சொட்டு எலுமிச்சைச்சாறை கலந்து தூங்கச் செல்லும்போது நகம் விரல்கள் பாதம் முழுவதும் தடவி காய்ந்தவுடன் சாக்ஸ் அணிந்து உறங்கவும்.

பாலில் தோய்த்தெடுத்த பஞ்சு கொண்டு நகங்களில் தேய்த்து வந்தால் நகம் உடையாமலும் மினுமினுப்பாகவும் இருக்கும். குளிப்பதற்கு முன் கஸ்தூரி மஞ்சளுடன் வெண்ணெய்யைக் கலந்து நன்றாகத் தேய்த்து வந்தால் சொரசொரப்பான பாதமும் மிருதுவாகி விடும்.
 
வெதுவெதுப்பான நீர் நிறைந்த பெரிய பாத்திரத்தில் ஷாம்பூ உப்பு மற்றும் ஒரு எலுமிச்சம்பழத்தின் சாறை விட்டு அந்த தண்ணீரில் சில நிமிடங்கள் பாதங்களை அமிழ்த்தி வைத்து ப்யூமிக் கல்லால் தேய்க்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவி நன்றாக துடைத்து விடவும்.
 
சிறிது கற்றாழை ஜெல்லுடன் கடலை மாவைக் கலந்து மிக்ஸியில் அரைத்து 2 நாட்களுக்கு ஒருமுறை உள்ளங்கால் பாதம் கணுக்கால் முழுவதும் தேய்த்துக் கழுவ காயத்தால் ஏற்பட்ட தழும்புகள் கருமை மறைந்து சருமம் இயல்பான நிறத்துக்கு மாறும்.
 
நான்கு துளி விளக்கெண்ணெயை உள்ளங்கையில் எடுத்துக்கொண்டு நன்றாக சூடு பறக்க தேய்த்து 2 பாதங்களிலும் தேய்த்து வர பாதம் மினுமினுப்பாக மாறும்.
 
மாதம் இருமுறை வெள்ளை எள்ளை அரைத்து பாதம் நகங்களில் பத்துபோல் போட்டு கழுவவும். இது நகத்தின் இடுக்குகளில் படிந்துள்ள மண் அழுக்குகளை அகற்றி நல்ல பளபளப்பை கொடுப்பதுடன் வெடிப்பு வராமலும் பாதுகாக்கும்.
 
காலணிகளையும் சரியான அளவில் போட வேண்டும். தரமானதாகவும் சௌகரியமானதாக வாங்கி அணியும்போது பாதம் கருத்துப் போகாமல் இயல்பாய் இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெப்பாலை மூலிகையின் மருத்துவ பயன்கள் !!