Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சருமத்திற்கு பலவிதமான நன்மைகளை தரும் அரிசிமாவு !!

Advertiesment
சருமத்திற்கு பலவிதமான நன்மைகளை தரும் அரிசிமாவு !!
அரிசி மாவும் சருமத்துக்கும் பலவிதமான நன்மைகளை தருகிறது. எந்தெந் சரும பிரச்சனையாக இருந்தாலும் எப்படி, எதனுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம். 

தேவையான பொருட்கள்: அரிசி மாவு - 3 டீஸ்பூன், காய்ச்சாத பால் - 3 டீஸ்பூன், தயிர் - 3 டீஸ்பூன், அனைத்தையும் சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் பேக்  போடவும். முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி இலேசாக மசாஜ் செய்து விடவும்.அப்படியே உலரவிடவும். 30 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான  நீரில் கழுவவும்.
 
முகத்தில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றும். அழுக்குகளை அகற்றும். முகத்தின் மங்கிய நிறத்தை மாற்றும். வாரம் இரண்டு முறை பயன்படுத்தினால் முகத்தின் நிறம் அதிசயத்தக்க அளவில் பளிச்சென்று இருக்கும்.
 
சருமத்தில் கொப்புளங்கள், உஷ்ணக்கட்டிகள், கோடையில் வியர்க்குரு, சிவப்பு, அரிப்பு தடிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால் அவை சருமத்தில் எரிச்சலை  உண்டாக்கும்.
 
அரிசி கழுவிய நீர் அல்லது அரிசி மாவை சிறிது நீரில் கரைத்து ஐஸ்க்யூப்களில் ஊற்றி வைக்கவும். அவை ஐஸ்கட்டிகளாக உறைந்ததும் அதை கொண்டு சருமத்தில் முகம் முழுக்க எங்கெல்லாம் அரிப்பு பிரச்சனை உள்ளதோ அங்கெல்லாம் ஒத்தடம் கொடுக்கவும். தினமும் 15 நிமிடங்கள் வரை இப்படி செய்து வந்தால்  சரும அழற்சி நீங்கும். 
 
அரிசி மாவு முகத்தில் சருமத்துளைகளில் இருக்கும் அழுக்குகளை நீக்க உதவிடும். முகத்தில் இறந்த செல்கள் தங்கிவிடுவதால் முகப்பருக்கள் வருகிறது  அவ்வப்போது அதை வெளியேற்ற வேண்டும். இரண்டு முறை செய்த பிறகு கிடைக்கும் பொலிவை ஒருமுறை அரிசி மாவு பயன்படுத்தினாலே கிடைத்துவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2.40 லட்சமாக குறைந்த தினசரி பாதிப்பு – இந்தியாவில் கொரோனா நிலவரம்!