முகத்தை தினந்தோறும் சோப்பில் கழுவாமல், முல்தானி மெட்டி தூள், தக்காளி பழம் அவ்வளவுதான். இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து கழுவி வாருங்கள். நல்ல வித்தியாசம் தெரியும்.
முதலில் உங்களது முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் சுத்தமாக கழுவி விடுங்கள். அதன் பின்பு முகத்தை நன்றாக துடைத்துக் கொள்ளவும். நல்ல பழுத்த தக்காளிப் பழத்தை மிக்ஸியில் அறைத்தோ அல்லது கையில் இடித்தோ தக்காளியை விழுதாக தயார் செய்து எடுத்துக்கொள்ளுங்கள்.
தக்காளியை வடிகட்டி சாறு எடுக்க வேண்டாம். தக்காளி பழத்தை அறைத்து விழுதாக தயாரித்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக இரண்டு ஸ்பூன் முல்தானிமெட்டி தூளுடன், 2 டேபிள் ஸ்பூன் தக்காளி பழ விழுதை நன்றாக கலந்து பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ளவும்.
நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த விழுதினை உங்களது முகத்தில் தடவி 5 நிமிடங்கள் லேசாக மசாஜ் செய்து விட வேண்டும். வட்ட வடிவில் மசாஜ் செய்வது சிறந்தது. கீழ் பக்கம் இருந்து மேல் பக்கமாக மசாஜ் செய்ய வேண்டும். அதன்பின்பு 2 நிமிடங்கள் கழித்து லேசாக உலர்ந்தது வரும் நிலையில், தண்ணீர் போட்டு முகத்தை சுத்தமாக கழுவி விடலாம்.
இந்த முறைப்படி காலை ஒரு வேளை, மாலை ஒருவேளை சோப்புக்கு பதில் இந்த விழுதை பயன்படுத்தி உங்களது முகத்தை கழுவி வாருங்கள். உங்கள் முகத்தில் இருக்கும் தேவையில்லாத ஒயிட் டெட் செல்ஸ், பிளாக் டெட் செல்ஸ், முகப்பரு, ரேஷஸ் போன்ற பிரச்சனைகள் எல்லாம் நீங்கி, முகம் பொலிவு பெறும்.
குறிப்பு:
இந்த முல்தானி மெட்டியானது உங்களது முகத்தில் தேவையில்லாமல் எண்ணெய் வடியும் தன்மையைக் கட்டுப்படுத்தும்.
சருமத்தை மென்மையாக்கும். தக்காளிப் பழ விழுதானது, உங்கள் முகத்தில் படிந்திருக்கும் தேவையற்ற அழுக்குகளை நீக்க உதவியாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் இந்த தக்காளி பழ விழுதானது, உங்களது தோலின் நிறத்தை அதிகப்படுத்திக் காட்டும்.
ஒரு தக்காளிப் பழத்தை அறைக்கும் போது, அதிகப்படியான விழுது கிடைக்கும். மீதமுள்ள விழுதை ஃப்ரிட்ஜில் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, அடுத்த நாளும் பயன்படுத்திக் கொள்ளலாம் தவறில்லை. ஆனால் பயன்படுத்துவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக, ஃபிரிட்ஜில் இருந்து வெளியில் எடுத்து வைத்துவிடுங்கள்.
தினம்தோறும் இந்த முறையை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உங்களது முகத்தில் கட்டாயம் வித்தியாசம் தெரியும்.