Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாதங்களில் ஏற்படும் பித்தவெடிப்பை சரிசெய்யும் மருத்துவ குறிப்புகள்!!

பாதங்களில் ஏற்படும் பித்தவெடிப்பை சரிசெய்யும் மருத்துவ குறிப்புகள்!!
தினமும் குளித்து முடித்ததும் பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின் பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்தால் பாத வெடிப்பு வராமல் தடுக்கலாம். இரவு நேரத்தில் உறங்க செல்லும் முன் கால நன்றாக கழுவி சிறிது தேங்காய் எண்ணெய்  தடவினால் நல்லது.
குதிகால் வெடிப்பு மறைய கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து பின் பாதத்தை சொரசொரப்பான பிரஸ்சை கொண்டு தேய்த்து கழுவினால் பாதத்தில்  காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் வெடிப்பு ஏற்படுவது நிற்பதோடு பாதம் மென்மையாகவும் இருக்கும்.
 
பாதங்களின் ஈரப்பதத்தை நீட்டிக்க, இரவு மற்றும் பகல் முழுவதும் பாதங்களுக்கு காலுறைகள் அணிந்து கொள்வது நல்லது. குதிகால் வெடிப்பு மறைய, சுடு தண்ணீரில் அதில், உப்பு, எலுமிச்சை சாறு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து 20 நிமிடங்கள் வரை பாதங்களை  ஊறவைத்து, பாத ஸ்க்ரப்பரை கொண்டு, பாதங்களை சுற்றியுள்ள பகுதிகளை தேய்க்கவும். இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து, தினமும் ஒரு  முறை செய்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
 
வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்புச் சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து  வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் பாத வெடிப்பு நீங்கும்.
 
வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல குழைத்து பாத வெடிப்பு உள்ள இடத்தில் தடவலாம்.
 
குதிகால் வெடிப்பு மறைய ஒரு டீஸ்பூன் நீர்க்காத கிளிசரின், 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து, கால்  பித்த வெடிப்பின் மீது தடவி, இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு, காலை எழுந்தவுடன் வெது வெதுப்பான நீரில் காலை கழுவினால்  நல்ல பலன் கிடைக்கும்.
 
பாதங்கள் ஈரப்பதத்துடன் இருக்க, 2 டீஸ்பூன் அரிசி மாவுடன் கொஞ்சம் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினீகரை சேர்த்து, அடர்த்தியான பேஸ்ட்  தயார் செய்யுங்கள்.
 
பாதங்கள் பித்த வெடிப்புடன் வறண்டு இருந்தால், ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அல்லது இனிப்பு பாதாம் எண்ணெயை சேர்த்து, வெது வெதுப்பான நீரில் பாதங்களை, 10 நிமிடம் வரை ஊறவைத்து கழுவிய பின், அந்த பேஸ்ட்டை பாதத்தில் தேய்க்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாய்வுத் தொல்லை பிரச்சனையை தீர்க்கும் அற்புத மருத்துவ குறிப்புகள்...!!