Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமுடி நன்கு வளர உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

தலைமுடி வளர
Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (10:54 IST)
பச்சைக் காய்கறிகளை நிறைய சாப்பிடுவதும் கறிவேப்பிலை, நெல்லிக்காய், பால், பழங்கள், முளைக்கட்டிய தானியங்கள், வெண்ணெய், கோதுமை உணவுகள், சோயாபீன்ஸ், பருப்பு வகைகளை நிறைய உணவாகக் கொள்வதும் முடியை நன்கு வளர்த்திட வழிவகுக்கும்.


செம்பருத்திப்பூவின் சாறை முடி உதிர்ந்த இடத்தில் தேய்த்து வந்தால், தலைமுடி நன்றாக வளரும். ஆலிவ் ஆயிலை முதல் நாள் இரவு சூடாக்கி தலையில் தேய்த்து மறுநாள் காலையில் குளித்தால், முடி பளபளப்பாகவும், நன்றாகவும் வளரும்.

செம்பருத்தி பூ அதிக குளிர்ச்சியைத் தரும் என்பதால் இரவு நேரங்களில் தேய்ப்பதைத் தவிர்த்து விடுங்கள். உடல் அதிகளவில் உஷ்ணமானாலும் முடி உதிர ஆரம்பிக்கும். இந்த உஷ்ணத்தையும் செம்பருத்தி பூ போக்கிவிடும்.

தாமரை இலையை அரைத்துச் சாறெடுத்து நல்லெண்ணெய்யுடன் கலந்து தைலமாக காய்ச்சி வைத்துக் கொள்ளவும். இதனை தலைமுடி உதிர்ந்து வழுக்கைப் போல் காட்சியளிக்கும் இடத்தில் தேய்த்துவர, அந்த இடத்தில் முடி கருகருவென மீண்டும் வளரத் துவங்கிவிடும்.

வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை வெயிலுக்கு உகந்த கம்பங்கூழ்.. என்னென்ன பலன்கள் தெரியுமா?

ஐஸ் கட்டி நீர் தெரபியால் கிடைக்கும் பலன்கள்..!

சைலண்ட் ஹார்ட் அட்டாக்.. கவனிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து..!

இனிப்பு உணவுகள் அதிகம் சாப்பிட்டால் அறிவாற்றல் பாதிக்குமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

டீ, காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சினை வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments