Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமுடி உதிர்வை தடுக்கும் இயற்கை மருத்துவ குறிப்புகள்....!!

Webdunia
தலைமுடி உதிர்வதைத் தடுத்து முடியின் வேரை வலுப்படுத்தி கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்வதில் சின்ன வெங்காயம் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் சின்ன வெங்காயச் சாற்றை தலையில் 5 நிமிடம் மசாஜ் செய்வதனால் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.
 

முடி வளர கைகளில் கிடைக்கும் கண்ட எண்ணெய்யை வாங்கிப் பயன்படுத்தி சோதனை செய்வதை விட்டு வெங்காயச் சாற்றை பயன்படுத்துவது பக்கவிளைவை ஏற்படுத்தாத ஒரு வழிமுறையாகும்.
 
வெங்காயச் சாறு தயாரிக்கும்போது நறுக்கிய சின்ன வெங்காயத்தை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவேண்டும். பின்னர் வெங்காயம் நன்கு வெந்து அதிலுள்ள சாறு வெளியேறியவுடன் அந்த நீரை வடிகட்டி ஸ்கால்ப்பில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு  தலைமுடியை அலசினால் ஒரே மாதத்தில் முடி கொட்டுவது நின்றுவிடும். கொதிக்கும் தேங்காய் எண்ணெய்யில் சின்ன வெங்காயச் சாறு கலந்தும் தலையில்  தடவலாம்.
 
சூடு ஆறியபின்னர் வெங்காய சாறு கலந்த சுத்தமான தேங்காய் எண்ணெயை தலையில் தடவி தலை குளித்து வந்தால் தலைமுடி வேரை வலுப்படுத்தி வளர்ச்சியடையச் செய்கிறது. இதே போல தேனுடன் சின்ன வெங்காயச் சாறு கலந்தும் தலைமுடிக்கு தடவலாம்.
 
2 வாரங்களில் முடி உதிர்வது குறைந்து 4 வாரத்தில் புதிதாக முடி வளரும். ஆலிவ் எண்ணெய்யை 15 நிமிடம் தலையில் தேய்த்து பின்னர் வெங்காயச் சாற்றினைக்  கொண்டு மசாஜ் செய்து 10 நிமிடத்துக்குப் பின் ஷாம்பு போட்டு மிதமான சுடுநீரில் தலையை அலசினால் தலைமுடி நன்கு வளரும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரைக்கு மாற்றாக வெல்லத்தை பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள்?

நீரிழிவு நோயாளிகளுக்கு நள்ளிரவில் பசி எடுத்தால் என்ன செய்ய வேண்டும்? பயனுள்ள டிப்ஸ்..!

நன்னாரி: உடலைக் காக்கும் அற்புத மூலிகை - அதன் மருத்துவப் பயன்கள்!

ஜூஸ் Vs. ஸ்மூத்தி: எது சிறந்தது? - ஆரோக்கிய நன்மைகள் ஒரு முழுமையான பார்வை!

காடை இறைச்சி: சுவையும் சத்தும் நிறைந்த ஆரோக்கிய உணவு!

அடுத்த கட்டுரையில்
Show comments